Aravind samy: சாக்லேட் பாய் அரவிந்த் சாமியின் க்யூட் மனைவி..பார்த்து பொறாமைப்படும் 90ஸ் கேர்ள்ஸ்!
சென்னை: பெண்களின் கனவு கண்ணனாகவும் சாக்லெட் பாயாகவும் வலம் வந்த அரவிந்த் சாமியின் மனைவியைப் பார்த்து 90ஸ் கேர்ள்ஸ் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் ஆவார்.

அப்பா தொழிலதிபராக இருந்த போதும்,பாக்கெட் மணி கொடுக்காததால், பாக்கெட் மணிக்காக கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்து வந்தார்.
தளபதி படத்தில்: அரவிந்த் சாமியின் மாடலிங் விளம்பரத்தை பார்த்த மணிரத்னம் தளபதி படத்தில் ஒரு முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். ரஜினிகாந்த் - மம்மூட்டி என இரண்டு ஜாம்பவான்களுக்கு நடுவே தளபதி படத்தில் அரவிந்த் சாமியை அறிமுகமாக்கினார். அறிமுகமான முதல் படத்திலேயே ரஜினியை எதிர்க்கும் வலுவான கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

பிரபலமான நடிகர்: தளபதி படம் நாடெங்கிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தார்.
விபத்தில் சிக்கினார்: பின் 2005 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி அவருக்கு கால் செயல்படாமல் போனது. இதற்காக தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்துக்கொண்டதால், உடல் எடை கூறி ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். பின் தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும், கடல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

கம்பேக்: அரவிந்த் சாமியை சாக்லெட் பாயாக பார்த்த ரசிகைகளை திகைப்பில் ஆழ்த்தும் வகையில் தனிஒருவன் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படம் அரவிந்த் சாமிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து செக்கக்சிவந்த வானம், போகன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.
குடும்ப புகைப்படம்: தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அரவிந்த் சாமியின் அழகான மனைவி,மகள் மற்றும் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மகள் ஆதிரா சமையல் கலை வல்லுனராகி மிகப்பெரிய செஃப் ஆக உள்ளார். அதேபோல் மகன் ருத்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபி என்ற இண்டர்நேஷனல் பேக்கலரேட் படிப்பை முடித்தார். குடும்ப புகைப்படத்தில் அரவிந்த் சாமியின் மனைவியை பார்த்த 90ஸ் பெண்கள் பொறாமைப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











