25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஹேண்ட்சம் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிரபல நடிகரான அரவிந்த் சாமி 25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் தளபதி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானாவர் அரவிந்த் சுவாமி. அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பியாகவும் க்யூட் கலெக்ட்டராகவும் நடித்திருப்பார் அரவிந்த் சுவாமி.

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். படம் பட்டையை கிளப்ப அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.

கடல் படத்தின் மூலம்

கடல் படத்தின் மூலம்

90களில் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த் சுவாமி, பின்னர் இரண்டாவது ஹீரோ, கிடைத்த ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு கடல் படத்தின் மூலம் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம்.

ஹேண்ட்சம் வில்லன்

ஹேண்ட்சம் வில்லன்

பின்னர் 2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் அவரை ஹேண்ட்சம் வில்லனாக அறிமுகப்படுத்தினார் மோகன் ராஜா. அதன்பிறகு தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இறுகப் பிடித்துக் கொண்டார் அரவிந்த் சுவாமி.

ரிலீஸுக்கு தயார்

ரிலீஸுக்கு தயார்

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், கள்ளபார்ட், தலைவி ஆகிய படங்கள் படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

முக்கிய கதாப்பாத்திரத்தில்

முக்கிய கதாப்பாத்திரத்தில்

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ஒட்டு' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

25ஆண்டுகளுக்கு பிறகு

25ஆண்டுகளுக்கு பிறகு

இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரவிந்த் சாமி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தேவராகம் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் சாமி, தற்போது மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X