தலைவி படத்தில் எம்ஜிஆராக நடிக்கப்போறது இவராமே?!

சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 70 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த படத்திற்கு தலைவி என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா கேரக்டர்

ஜெயலலிதா கேரக்டர்

இந்தப்படத்தை, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏஎல் விஜய் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க உள்ளார்.

தீபக்கிடம் என்ஒசி

தீபக்கிடம் என்ஒசி

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தலைவி படம் உருவாகவுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தலைவி படக்குழு ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கிடம் என்ஓசி பெற்று படத்தை உருவாக்குகிறது.

எம்ஜிஆராக?

எம்ஜிஆராக?

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X