அவரை தவிர யாரும் இதை செய்திருக்க முடியாது.. இமேஜை கெடுக்க சதி.. முன்னாள் காதலி மீது பாயும் நடிகர்!
சென்னை: பணப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள் வெளியானதற்கு அந்த நடிகைதான் காரணம் என முன்னாள் காதலி மீது பாய்ந்திருக்கிறார் பிரபல நடிகர்.
Recommended Video
இந்தி பிக்பாஸ் சீசன் 13ல் பங்கேற்ற திரை பிரபலங்கள் நடிகர் அர்ஹான் கான் மற்றும் நடிகை ரஷமி தேசாய். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
ஆனார் அர்ஹானுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்ததால் அவரை விட்டு பிரிந்தார் ரஷமி தேசாய். இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

வெளியான ஸ்க்ரீன்ஷாட்ஸ்
இந்நிலையில் ரஷமி தேசாயின் வங்கிக் கணக்கில் இருந்து அர்ஹான் கான் கணக்கிற்கு பணம் ட்ரான்ஸாக்ஷன் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் அண்மையில் வெளியானது. அதாவது அர்ஹான் கானின் வங்கிக் கணக்கில் இடம்பெற்றுள்ள மஸர் ஷேய்க் என்ற பெயருக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ரஷமியின் வேலை
இதனை ரஷமி தேசாயின் ரசிகர்கள் ட்ரென்ட் செய்தனர். இதுகுறித்து பேசிய நடிகை ரஷமி தேசாய் ஸ்க்ரீன் ஷாட்ஸ் வெளியானது குறித்து தனக்கு தெரியாது என்றார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அர்ஹான் கான், இது ரஷமியின் வேலையாகத்தான் இருக்கும்.

என்னுடையது அல்ல
என்னையும் அவரையும் தவிர இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை வேறு யாரும் வெளியிட்டிருக்க முடியாது. குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரானவை என்பதால், ரஷமிதான் இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை லீக் செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பெரிய தொகைகள் சம்பந்தப்பட்ட பாதி பரிவர்த்தனைகள் என்னுடையவை அல்ல.

முதலீடு செய்துள்ளேன்
ரஷமியின் தயாரிப்பு நிறுவனத்தில் நானும் ஒரு பார்ட்னராக இருந்தேன். நான் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக சமமாக முதலீடு செய்துள்ளேன். இதில் இடம்பெற்றுள்ள பண பரிமாற்றம் என்னுடைய லாபம் அல்லது நான் கொடுத்த கடன் திருப்பி கொடுக்கப்பட்டிருக்கும்.

பரிமாற்றம் சாத்தியமில்லை
மேலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் கூறுவதற்கு முன், கையெழுத்திட்ட காசோலைகளை ரஷமி எனக்கு வழங்காவிட்டால் பணம் பரிமாற்றம் சாத்தியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷமி இல்லாத நேரத்தில் சிலருக்கு பணத்தை மாற்றும்படி அவர் என்னிடம் கேட்டிருந்தார்.

என்னிடம் பில்கள் உள்ளது
இது வேலை தொடர்பானது. ட்ரான்ஸாக்ஷன் பற்றி அவருக்கு முழுமையாக தெரியும். நான் சொல்வதை நிரூபிக்க என்னிடம் பில்கள் உள்ளன. என்னை துன்புறுத்தவும் என் பெயரை கெடுக்கவும் பின்னப்பட்ட திட்டமிட்டப்பட்ட சதி இது என்று கூறியுள்ளார் அர்ஹான் கான்.


Click it and Unblock the Notifications











