Arjun: அர்ஜூன் பிறந்தநாளில் வெளியாகும் லியோ கேரக்டர் கிளிம்ப்ஸ்.. ட்ரெண்டிங்கில் ஹரோல்ட் தாஸ்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப்படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றன.
முன்னதாக விஜய் பிறந்தநாளில் படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வில்லன் சஞ்சய் தத் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியானது.

அர்ஜூன் பிறந்தநாள் ஸ்பெஷல் -கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியீடு: நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. வாரிசு படத்தை தொடர்ந்து கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் -த்ரிஷா ஜோடி இணைந்துள்ளது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஒவ்வொரு சமயத்திலும் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
காஷ்மீரில் தொடர்ந்து 52 நாட்கள் கடுமையான குளிர், நிலநடுக்கத்திற்கிடையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், அதன் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தொடர்ந்து விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டர்கள் மற்றும் பர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி உற்சாகப்படுத்தியது. இதனிடையே, படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஏறக்குறைய இரு மாதங்களே உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியானது.
இந்நிலையில் லியோ படத்தின் அடுத்த அப்டேட்டாக இன்று மாலை 5 மணியளவில் நடிகர் அர்ஜூனின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் கேரக்டர் பெயர் ஆண்டனி தாஸ் என்பது வெளியாகி உள்ளது. இந்நிலையில் அர்ஜூனின் கேரக்டர் பெயர் ஹெரால்ட் தாஸ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்ஜூன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவரது கேரக்டர் கிளிம்ப்ஸ் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்த பெயர் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
படத்தில் சஞ்சய் தத்தின் தம்பியாக அர்ஜூன் நடித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதை நிரூபிக்கும் வகையில், இருவரின் பெயரும் தாஸ் என நிறைவடைகிறது. விஜய்யின் நண்பனாக இருந்து விரோதியாக அர்ஜூன் மாறுவதாகவும் முன்னதாக கதை குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், நடிகர் அர்ஜூன் இந்த கேரக்டர் மற்றும் படத்தில் எப்படி இருப்பார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் விஜய்யின் வாரிசு படம் வெளியானது. பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு வாரிசு படம் உருவாகியிருந்தது. லியோ படத்தில் விஜய் கேங்ஸ்டராக லியோ மற்றும் பார்த்திபன் என்ற இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் கேரக்டரை எப்படி உருவாக்கியிருப்பார் என்பதை அறியவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











