விடாமுயற்சி எப்ப ரிலீஸ் தெரியுமா.. தெறிக்க விட்ட நடிகர் அர்ஜுன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட படம் விடாமுயற்சி. இந்த படத்தின் சூட்டிங் சில மாதங்கள் அசர்பைஜானில் நடத்தப்பட்ட நிலையில் சில மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. விடாமுயற்சி படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதத்தில் ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ajithkumar vidaamuyarchi movie arjun

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் -இயக்குனர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ளது விடாமுயற்சி படம். இந்த படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் இடையில் சில மாதங்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்படாமல் முடங்கியது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது முற்றிலும் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தீபாவளியையொட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

டிசம்பர் ரிலீஸ்: இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திலும் படத்தின் ரிலீசில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சைமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இந்த படத்தின் வில்லன் நடிகர் அர்ஜுன், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்திய அர்ஜுன்: தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான சூட்டிங்கை தான் நிறைவு செய்துவிட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் பெயரை குறிப்பிட்டு அவர் பேசிய நிலையில் விருது வழங்கும் அரங்கில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரம் மேற்கொண்டனர். இதனிடையே தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டியையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் குட் பேட் அக்லி ரிலீஸ்: இந்தப் படத்தின் சூட்டிங்கை மிகவும் திட்டமிடலுடன் ஆதிக் ரவிச்சந்திரன் மேற்கொண்டு வருகிறார். விடாமுயற்சிக்கு முன்னதாகவே இந்தப் படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்நிலையில், டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் பொங்கல் ரிலீசாக விடாமுயற்சி ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் மே மாதத்தில் அஜித்தின் பிறந்தநாளுக்கு தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்றாகவேனும் ரிலீசாகி வந்த நிலையில், தற்போது ஏறக்குறைய இரண்டு ஆண்டு இடைவெளியில் துணிவு படத்திற்கு பிறகு அவரது அடுத்தப்படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X