விஜய்யை தொடர்ந்து அஜித்திற்கு வில்லனாகும் மாஸ்டர் பட நடிகர்.. குட் பேட் அக்லி பட அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்பெயின் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ajithkumar good bad ugly movie arjun das

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாகவே சூட்டிங்கை துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இடையில் ஒரு மாதம் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அஜித் அசர்பைஜான் சென்ற நிலையில், தற்போது மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஸ்பெயின் செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் பொங்கலையொட்டி இருக்கும் என்று படக்குழுவினர் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த படங்கள்: கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் சூட்டிங், இழுபறியான நிலையில், இந்தப் படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சியின் சூட்டிங் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பரையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குட் பேட் அக்லி மே மாதம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட போஸ்டரில் இந்தப் படத்தின் பொங்கல் ரிலீஸ் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித் படத்தில் அர்ஜுன் தாஸ்: இந்தப் படத்தின் சூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்தின் நாயகியாக மீண்டும் திரிஷாவே இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வில்லனாக தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். முன்னதாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ள இவர், இடையில் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள நிலையில், தற்போது அஜித்திற்கு வில்லனாகியுள்ளார். விரைவில் ஸ்பெயினிற்கு படக்குழு செல்லவுள்ள நிலையில், அந்த சூட்டிங்கில் இவரும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: முன்னதாக மார்க் ஆண்டனி என்ற படத்தை கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்த நிலையில், அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மைத்ரி முவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அஜித் மூன்று கேரக்டர்களில் நடித்துவருவதாக கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவ்லகள் தெரிவிக்கின்றன. இதனால் குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X