Vidaamuyarchi - ஆளை விடுங்கப்பா.. விடாமுயற்சியிலிருந்து வெளியேறிய நடிகர்?.. உள்ளே வந்த பிக்பாஸ் பிரபலம்?
சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க லேட்டாவதால் பிரபல நடிகர் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. வி செண்ட்டிமெண்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியும் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

உலக சுற்றுப்பயணம்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் சென்னை திரும்பிவிட்டதால் விடாமுயற்சி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
எப்போது ஷூட்டிங்?: இந்தச் சூழலில் விடாமுயற்சியில் இருந்த அத்தனை சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாகவும்; விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்னமும் அடுத்ததாக ஒரு அடிகூட படக்குழு எடுத்து வைக்கவில்லை. இதனால் விடாமுயற்சிக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்க அஜித்தோ வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.
அபுதாபியில் ஷூட்டிங்: நிலவரம் இப்படி இருக்க இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் தொடங்கலாம் என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, ஹுமா குரேஷி உள்ளிட்டோரும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
புதிய தகவல்: இந்நிலையில் விடாமுயற்சி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் தாமதமாகும் சிக்னல்கள் தெரிவதால் இந்தப் படத்திலிருந்து அர்ஜுன் தாஸ் விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமும்; கலகத்தலைவனில் வில்லனாக நடித்தவருமான ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











