Arjun Das: வாய்சும் இல்லை.. நானும் இல்லை.. துருவ நட்சத்திரம் அப்டேட் சொன்ன அர்ஜூன் தாஸ்

சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம்.

பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் நிலையில், விரைவில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Arjun das opens up about his precence in Dhruva Natchathiram movie

இந்தப் படத்தின் ட்ரெயிலர், டீசர், பாடல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ந்தது.

துருவ நட்சத்திரம் படத்தில் தான் இல்லை என அர்ஜூன் தாஸ் விளக்கம்: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். ஸ்பை த்ரில்லராக கடந்த 2016ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் இடையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஸ்டைலிஷ்ஷான விக்ரமை பார்க்க முடிந்தது.

இந்தப் படத்தின் இடையில் விக்ரமிற்கும் கௌதம் மேனனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப்படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு, மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு, தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியான நிலையில், தற்போது மீண்டும் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் பாடல் ஒன்றும் வெளியானது. முன்னதாக வெளியான பாடலில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார். இதையொட்டி பாடலில் இடம்பெற்றிருந்த அவரது காட்சிகளும் நீக்கப்பட்டு பாடல் வெளியானது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Arjun das opens up about his precence in Dhruva Natchathiram movie

இந்தப் படத்தின் இரண்டு டீசர்கள் வெளியான நிலையில், அந்த டீசர்களில் மிரட்டலான வாய்ஸ் கொடுத்திருந்தார் அர்ஜூன் தாஸ். இந்த வாய்ஸ் அந்த டீசர்களுக்கு சிறப்பாக அமைந்தது. ஜான் ஜான் ஜான் என்று துவங்கும் டீசர் சிறப்பான கவனம் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் அந்த டீசர்களோடு தன்னுடைய பார்ட் ஓவர் என்றும் படத்தில் தானும் நடிக்கவில்லை என்றும் தன்னுடைய வாய்சும் இல்லை என்றும் சமீபத்திய பேட்டியில் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த வாய்சை கேட்டுத்தான் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மாஸ்டர் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுத்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனிடையே விரைவில் ரிலீசாகவுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த அர்ஜூன் தாஸிற்கு அந்தப் படம் சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாகவும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X