லியோ படம் நிச்சயம் பெரிய சம்பவம்தான்.. எதிர்பார்ப்பை எகிறவைத்த கைதி அர்ஜுன் தாஸ்

பெங்களூரு: லியோ படம் குறித்து கைதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக அளவு இருக்கிறது.

பட்டையை கிளப்பிய லியோ ப்ரோமோ

பட்டையை கிளப்பிய லியோ ப்ரோமோ

கமலுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்த படத்துக்கு விக்ரம் என தலைப்பு அறிவிக்கப்பட்டபோது ஒரு ப்ரோமோ வீடியோவுடன் படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ். அது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் விஜய்யுடன் தற்போது இணைந்திருக்கும் லியோ படத்துக்கும் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ப்ரோமோவிலேயே லோகேஷ் கனகராஜின் சம்பவங்கள் தெரிகிறது எனவும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

எல்சியூவில் வருகிறதா லியோ

எல்சியூவில் வருகிறதா லியோ

ஹாலிவுட்டில் இருக்கும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல் கோலிவுட்டிலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதன் அடிப்படையில் விக்ரம் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் பழைய விக்ரம் படத்தையும், கைதி படத்தின் கதாபாத்திரங்களையும் இணைத்து அதகளம் செய்திருந்தார் லோகேஷ். எனவே லியோ படமும் எல்சியூவில் வருமா என்ற கேள்வி உருவாகியிருக்கிறது. மேலும், கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் உள்ளிட்டோரும் காஷ்மீர் சென்றிருப்பதால் இது எல்சியூவில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

ரத்னகுமார் பற்ற வைத்த எதிர்பார்ப்பு

ரத்னகுமார் பற்ற வைத்த எதிர்பார்ப்பு

லியோ படத்துக்கு திரைக்கதை, வசனத்தை லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எழுதும் ரத்னகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லியோ படத்துக்கான எதிர்பார்ப்பை பெரிதாகவே வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட லி யோ படம் அதிகமாகவே இருக்கும் என கூறியிருந்தார். அதேபோல் பலரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வெயிட்டிங் படமாக லியோ மாறியிருக்கிறது.

அர்ஜுன் தாஸ் சொன்ன அப்டேட்

அர்ஜுன் தாஸ் சொன்ன அப்டேட்

இந்நிலையில் கைதி படத்தில் அன்பு கேரக்டரில் நடித்து ஸ்கோர் செய்த அர்ஜுன் தாஸ் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த அர்ஜுனிடம் லியோ குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அர்ஜுன் தாஸ், லியோ அப்டேட் வரும் கண்டிப்பா வரும். லியோ படம் ஒரு லோகேஷ் கனகராஜின் சம்பவமாக இருக்கும் என்றார்.

லியோவில் இணைந்த நட்சத்திரங்கள்

லியோவில் இணைந்த நட்சத்திரங்கள்

லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டுமின்றி லியோ படத்தில் சூர்யாவோ இல்லை கமல் ஹாசனோ நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X