Arjun Das: லியோ படத்தில் நான் இருக்கேனா.. அர்ஜூன் தாஸ் கொடுத்த அப்டேட்!

சென்னை: பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இணைந்துள்ளார் விஜய்.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் லியோ படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

லியோ படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் போஸ்டர்கள் வெளியான நிலையில், அடுத்ததாக ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Actor Arjun Das speaks about whether he is part of Leo movie

லியோ படம் குறித்து பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ்: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், அனுராக் காஷ்யப் என முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இணைந்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின்மூலம் விஜய் -லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அம்சங்கள் அதிகமாக அமைந்துள்ளன. விஜய் -த்ரிஷா ஜோடி 14 ஆண்டுகளை கடந்து தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளதும் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் தொடர்ந்து நடிகர்களை சேர்த்து வருவதாக லோகேஷ் கனகராஜ் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. அதற்கேற்ப, தற்போது விஜய்யின் சூட்டிங்கை முடித்துள்ள நிலையில், காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் பேட்ச் வொர்க்கில் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பை இணைத்துள்ளார் லோகேஷ். விக்ரம் படத்தில் நடித்த அதிகமான நடிகர்கள், இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர்.

தொடர்ந்து லியோ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. படத்தல் இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இருவேறு கெட்டப்புகளின் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. முன்னதாக காஷ்மீர் சூட்டிங்கின்போது, விஜய்யின் ஒரு கெட்டப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில், மற்றொரு கெட்டப்பில் அவரது பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

விஜய் பிறந்தநாளையொட்டி இந்த பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இது விஜய்யின் வழக்கமான கெட்டப்பாக அமைந்திருந்தது. பாடலில் அவர், சிறப்பான நடனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது வாய்சில் வெளியான இந்தப் பாடலில் ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்களும் பயன்படுத்தப்பட்டிருந்தனர். பாடல் தொடர்ந்து ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து, யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்தது. கலகலப்பான விஜய்யை இந்தப் பாடலில் பார்க்க முடிந்தது.

Actor Arjun Das speaks about whether he is part of Leo movie

இந்நிலையில் இந்தப் படத்தில் சிறிய சிறிய கேரக்டர்களிலும் அதிகமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். அவர்களில் அர்ஜூன் தாசும் ஒருவர் என்று முன்னதாக கூறப்பட்டது. இந்நிலையில் லியோ படத்தில் அர்ஜூன் தாஸ் இருப்பது குறித்து அவரிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ஜூன் தாஸ், இதற்கான விடையை வரும் அக்டோபர் 19ம் தேதி படத்தின் ரிலீரின்போது தெரிந்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் படங்களை ரசிகர்களை அதிகமாக விரும்புவதாகவும் அதனால் படம் LCUவில் உள்ளதாக என்பதை அறிந்துக் கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு படத்தின் கதை குறித்து தெரியும் என்றும் ஸ்டோரி டிஸ்கஷனில் தான் பங்கேற்றதாகவும் அதனால் படத்தின் கேரக்டர்கள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்த அர்ஜூன் தாஸ், இந்தப் படத்திலும் இருப்பார் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X