சூர்யாவிற்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்... எதுக்குன்னு பாருங்க
சென்னை : கைதி படத்தில் நடித்ததன்மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அர்ஜூன் தாஸ்.
தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு இவர் நன்றி பதிவிட்டுள்ளார்.

கைதி படத்தின் வில்லன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தில் வில்லனாக நடித்து தனக்கான அங்கீகாரத்தை தமிழ் திரையுலகில் பெற்றுள்ளார் அர்ஜூன் தாஸ். தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக தோன்றினார். இவரது குரல் மற்றும் உடல்மொழி ரசிகர்களின் விருப்பத்திற்கு உரியதாக மாறியுள்ளது.

புத்தம் புது காலை விடியாதா தொடர்
தற்போது புத்தம் புது காலை விடியாதா என்ற தொடரில் லோனர்ஸ் என்ற தலைப்பில் நடித்துள்ளார். இந்த தொடர் வரும் ஜனவரி 14ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த தொடரின் ட்ரெயிலரில் மிகவும் சிறப்பாக காணப்படுகிறார் அர்ஜூன் தாஸ்.

சூர்யாவிற்கு நன்றி
இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைதளத்தில் பதிந்துள்ள பகிர்வில் நடிகர் சூர்யாவிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா தனது பெற்றோரை சந்தித்ததாகவும் அதற்கு தனது இதயப்பூர்வமான நன்றியையும் அவர் கூறியுள்ளார்.

சூர்யாவின் தீவிர ரசிகர்கள்
தன்னை போலவே தன்னுடைய பெற்றோரும் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் என்றும் அவர்கள் சூர்யாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர்கள் முகத்தில் தான் மகிழ்ச்சியை பார்த்ததாகவும் அதை ஏற்படுத்தியதற்கு நன்றி என்றும் அர்ஜூன் தாஸ் மேலும் கூறியுள்ளார்.

பெருமையாக உணர்ந்த பெற்றோர்
தன்னை பற்றி நன்கு தெரியும் என்றும் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று சூர்யா வாழ்த்தியது தனது பெற்றோரை பெருமை கொள்ள செய்துள்ளதாகவும் அர்ஜூன் தாஸ் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். அவர்களை அவ்வாறு உணர வைத்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹீரோவாகும் வில்லன்
நடிகர் அர்ஜூன் தாஸ் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரது லுக் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், தற்போது புத்தம் புது காலை விடியாதா தொடரில் ஹீரோவாகியுள்ளார். தொடர்ந்து இவரை திரைப்படங்களிலும் ஹீரோவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











