Rasavathi: சண்டையில் சாகுறதுதான் வீரம்.. வெளியானது அர்ஜூன் தாஸின் ரசவாதி பட ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி படம் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்று தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி அநீதி படம் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தவர். இந்நிலையில் தற்போது மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள சூழலில் வரும் மே 10ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் அர்ஜுன் தாசுக்கு தன்யா ரவிச்சந்திரன் ஜோடியாகியுள்ளார். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ள சூழலில் படத்தின் ட்ரெயிலரில் அவரது உழைப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. படத்தின் டயலாக்குகள் வித்தியாசமாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Arjun das s Rasavathi movie trailer released by the team

நடிகர் அர்ஜூன் தாஸ்: நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர். தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி படத்தில் நாயகனாக நடித்திருந்தார். தற்போது ரசவாதி என்ற படத்தில் சாந்தகுமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சாந்தகுமார் இயக்கத்தில் முன்னதாக வெளியான மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

ரசவாதி படம்: தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ரசவாதி படத்தில் அர்ஜூன் தாசுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சுஜிதா ஷங்கர், சுஜாதா, விஜே ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தின் ட்ரெயிலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெயிலர் வித்தியாசமான வகையில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

ரசவாதி படத்தின் ட்ரெயிலர்: பயமில்லாமல் நடிப்பது தான் வீரமா என்றும் சண்டையில் சாவதுதான் வீரம் என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் என்றும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தின் ட்ரெயிலரில் வசனம் பேசுகிறார். ரகுவரன் போன்ற யூனிக்கான குரலும் தோற்றமும் கொண்ட அர்ஜுன் தாஸ் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்துவரும் கேரக்டர்களும் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்து வருகின்றன. அந்த வகையில் மகாமுனி உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக நிலை நிறுத்தியுள்ள சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான எதிர்பார்ப்பு: சாந்தகுமார் இயக்கத்தில் முன்னதா வெளியான மௌனகுரு, மகாமுனி படங்கள், அருள்நிதி மற்றும் ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான இடங்களை பிடித்தவை. இதில் மகாமுனி படம் சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்துள்ளன. இரண்டு படங்களிலும் மிகவும் அழுத்தமான கதைக்களங்களை கையாண்டிருந்தார் சாந்தகுமார். அந்த வகையில் ரசவாதி படமும் வித்தியாசமான தலைப்புடன் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் என்டர்டெயின் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X