ஜோராக நடைபெற்ற மகள் திருமணம்; தம்பி ராமையா போட்ட கண்டிஷனுக்கு மறுப்பு தெரிவிக்காத அர்ஜுன் குடும்பம்!

சென்னை: தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என்ற பெயருக்கு சொந்தக்காரர் அர்ஜுன். 90களில் இருந்து இப்போது வரை தனது மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் கூட இவருக்கான காட்சிகள் என்பது மாஸாக படமாக்கப்பட்டிருந்தது. அர்ஜுன் தற்போது விடாமுயற்சி படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார் இவர் ஏற்கனவே அஜீத்துடன் அவருடைய ஐம்பதாவது படமான மங்காத்தா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுனன் மகளான ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பிராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் என்ற தகவல்கள் நிச்சயதார்த்த போட்டோக்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் பத்தாம் தேதி உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

Arjun Aishwarya

காதல் தொடங்கிய இடம்: திருமணத்தில் தம்பி ராமையாவின் நெருங்கிய சொந்தத்தினரும் அர்ஜுனின் நெருங்கிய சொந்தத்தினரும் கலந்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி அங்கு வந்திருந்த அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவை சந்தித்துள்ளார். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. தங்களது காதலை இருவரும் தங்களது வீட்டில் கூறியதற்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Arjun Aishwarya

பிரபலங்கள்: இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த திருமணத்தில் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான படத்தில் நடித்திருந்த நடிகர் விஷால், சமுத்திரக்கனி, விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளனர். இந்த திருமணம் அர்ஜுன் தனது சொந்த செலவில் கட்டிய கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது.

Arjun Aishwarya

தம்பி ராமையா போட்ட கண்டிஷன்: தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு திருமணம் என்றவுடன் அனைவரது பார்வையும் பேச்சும் அதை பற்றியதாகத்தான் இருந்தது. இருவீட்டாரும் காதலுக்கு ஓ.கே. சொன்னாலும், மணமகன் உமாபதியின் அப்பாவான தம்பி ராமையா அர்ஜுன் மகளுக்கு அதாவது தனது மருமகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அந்த கண்டிஷனுக்கு ஐஸ்வர்யாவும் அர்ஜுன் வீட்டாரும் சம்மதம் தெரிவித்த பின்னர் தான் தம்பி ராமையா திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தாராம். குறிப்பாக ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் கண்டிஷனைக் கேட்டதும் மறுபேச்சு பேசாமல் ஓ.கே எனச் சொல்லிவிட்டாராம்.

தன்னை வளர்த்து விட்ட சினிமா துறைக்கு தனது மருமகள் நடிக்கவே போகக்கூடாது என தம்பி ராமையா கண்டிஷன் போட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேச்சும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. ஆனாலும் இது குறித்து இருவீட்டாரும் வாய் திறக்காமலே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X