Arjun: மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. மகள் திருமணம் குறித்து நடிகர் அர்ஜுன் நெகிழ்ச்சி!
சென்னை: ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் வினியோகஸ்தர் என பன்முக திறமையுடன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அர்ஜுன் நடிப்பில் வெளியான லியோ படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்த நிலையில் தற்போது அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி இருவருக்கும் கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, கேஎஸ் ரவிக்குமார், விஷால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் தன்னுடைய மகள் திருமணம் குறித்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜுன் தன்னுடைய நெகழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அர்ஜுன்: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சமுத்திரக்கனி, கேஎஸ் ரவிக்குமார், விஷால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் முன்னதாக இந்த திருமணத்தையொட்டி ஹால்டி, மெஹந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த திருமணத்தில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்ததுடன் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், படம் விநியோகஸ்தர் என பன்முகத் திறமையோடு செயல்பட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா -உமாபதி திருமணம்: கடந்த ஆண்டில் அர்ஜுன் நடிப்பில் லியோ படம் வெளியான சூழலில் தற்போது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பிரபலமான சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் தொகுப்பாளராக கலந்து கொண்டு மாஸ் காட்டினார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தற்போது மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இவர் விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
அர்ஜுன் நெகிழ்ச்சி: ஆனால் ஐஸ்வர்யாவிற்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதே போல நடிகர் உமாபதியும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்து நடிகர் அர்ஜுன், இன்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை பகிர்வதற்கு வார்த்தைகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகளுக்கும் தன்னுடைய விருப்பத்திற்குரிய உமாபதிக்கும் நடந்துள்ள இந்த திருமணம், மறக்க முடியாத அன்பையும் சந்தோஷத்தையும் மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்போதும் நேசிப்போம்: தன்னுடைய மகள் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததை சுட்டிக்காட்டியுள்ள அர்ஜுன், அவர்களது இந்த பயணம் மிகவும் அழகானதாக அன்பை பகிர்வதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரையும் அம்மா, அப்பா மற்றும் அஞ்சனா என அனைவரும் அவர்களை நேசிப்பதாகவும் நடிகர் அர்ஜுன் சுட்டிக்காட்டி உள்ளார். தன்னுடைய மகளின் இந்த திருமணம் குறித்து அவர் நெகிழ்ச்சியான இந்த பதிவை வெளியிட்டுள்ளது ரசிகர்களையும் சக நடிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











