மீடூ விவகாரம்... நடிகை ஸ்ருதிக்கு எதிராக ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு அர்ஜுன் வழக்கு!

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

Recommended Video

சினி சிப்ஸ் : இன்றைய சினிமா செய்திகள்- வீடியோ

பெங்களூரு: தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ. 5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை சமூகவலைதளத்தில் பெண்கள் பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் பல முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Actor Arjun files Rs 5 cr defamation suit against Sruthi Hariharan

அந்தவகையில், நடிகர் அர்ஜுன் மீது பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது நிபுணன் படப்பிடிப்பின்போது, அர்ஜுன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும், தன்னை சந்திக்கும்படி பலமுறை அழைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு தனது முகநூல் பக்கம் வாயிலாக அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார். அப்பதிவில் அவர், "நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்" என அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் அர்ஜுன். அதில், தனது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை ஸ்ருதி பேசியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X