'வலிமை' பட தயாரிப்பாளர் மகன்.. பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை!

By

சென்னை: அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழவதும் மக்களை கடுமையாக மிரட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டு இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடிவடிக்கை எடுத்தாலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, ஷர்மிளா மந்த்ரே உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

அர்ஜூன் கபூர்

அர்ஜூன் கபூர்

இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகன். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தார். இப்போது வலிமை படத்தை தயாரித்து வருகிறார். போனிகபூரின் முதல் மனைவி, மோனா கபூருக்கு பிறந்தவர் இவர்.

மலைகா அரோரா

மலைகா அரோரா

இந்தி சினிமாவில் இணை இயக்குனராக அறிமுகமான இவர், பின்னர் இஷாக்ஜாதே என்ற படம் ஹீரோ ஆனார். இதையடுத்து கண்டே, 2 ஸ்டேட்ஸ், ஹாஃப் கேர்ள்பிரண்ட், பானிபட் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகை மலைகா அரோராவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் அவர், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தி

தனிமைப்படுத்தி

இதுபற்றி தனது இன்ஸ்டாவில், 'கொரோனா சோதனையில் எனக்கு பாசிட்டிவ் என வந்தததை தெரிவிப்பது எனது கடமை. நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் ஆதரவுக்கு முன் கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் விடுபடும்

விரைவில் விடுபடும்

என் உடல் நலம் குறித்த அடுத்த தகவல்களை பிறகு தெரிவிப்பேன். இது அசாதாரணமான, இதற்கு முன் கண்டிராத கடினமானச் சூழல். இந்தக் கொடிய வைரஸில் இருந்து மனித குலம் விரைவில் விடுபடும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகைகள் ஹூமா குரேஸி, ஷோபி சவுத்ரி உள்பட பல சினிமா பிரபலங்கள் அவர் நலம் பெற வேண்டும் என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X