கர்நாடக மாநில பஞ்சாயத்து தேர்தலில் அர்ஜூன் அம்மா போட்டி

கர்நாடகத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2 கட்டமாக இது நடக்கிறது. இத்தேர்தலில் லட்சுமி தேவம்மா போட்டியிடுகிறார்.
இவர் ஏற்கனவே கடந்த 1987ம் ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் தனது கணவர் மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அரசியலுக்கு வருகிறார். தொட்டேரி என்ற இடத்திலிருந்து அவர் போட்டியிடுகிறார். இது அவரது சொந்த ஊரான ஜக்கனஹள்ளிக்கு அருகில் உள்ளது.
தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ள லட்சுமி தேவம்மா வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த பஞ்சாயத்து, ஐக்கிய ஜனதாதள தலைவர் குமாரசாமியின் மனைவி அனிதா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுகிரி தொகுதியின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
More from Filmibeat
actor arjun arjuns mother lakshmi devamma அர்ஜூனின் தாயார் லட்சுமி தேவம்மா நடிகர் அர்ஜூன் பஞ்சாயத்து தேர்தலில் அர்ஜூன் அம்மா போட்டி panchayat polls


Click it and Unblock the Notifications











