நடிகர் அர்ஜுன்: அஜித் எப்பவும் கிங்குதான்.. விடாமுயற்சி அப்டேட் கொடுத்த ஆக்ஷன் கிங்!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் சிறிது காலங்கள் சூட்டிங் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கப்பட்டு, தொடர்ந்து ஐதராபாத்திலும் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில், ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார் அஜித். காலை, மாலை என இரு வேளைகளிலும் மாறிமாறி அவர் நடித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்திலேயே அஜித்தின் விடாமுயற்சி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆயினும் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. இதனிடையே, நிதி நெருக்கடி, அசர்பைஜானின் காலச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் சில மாதங்கள் தடைப்பட்டன.
விடாமுயற்சி சூட்டிங்: இதையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து படத்தில் வில்லனாக இணைந்துள்ள நடிகர் அர்ஜுன் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். தொடர்ந்து அவரது கேரக்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன், படம் பார்த்தால் தன்னுடைய கேரக்டர் குறித்து அனைவருக்கும் தெரியவரும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அஜித் குறித்தும் தன்னுடைய பாராட்டை அர்ஜுன் கூறியுள்ளார்.
அஜித் எப்போதும் கிங்குதான்: இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் மங்காத்தா போல மாஸ் காட்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன், அஜித் எப்போதுமே கிங்கு தானே என்று தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கேரளாவில் புயலை ஏற்படுத்திவரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் தன்னுடைய கருத்துக்களை அர்ஜுன் பதிவு செய்துள்ளார். பாலியல் துன்புறுத்தல்களுக்கு சில அப்பாவி பெண்கள் உட்படுத்தப்படுவதாகவும் அதே நேரத்தில் சிலர் இந்த விஷயங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் அர்ஜுன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னணி ஹீரோக்களுக்கு வில்லன்: அர்ஜுன் அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான வில்லனாக அர்ஜுன் நடித்திருந்த நிலையில், தற்போது அஜித்திற்கு வில்லனாகியுள்ளார். லியோ படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில், விடாமுயற்சியிலும் மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.மகிழ் திருமேனியின் படங்களில் வில்லன் கேரக்டர்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமையும் நிலையில், அர்ஜுன் கேரக்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











