twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெய்ஹிந்த் முதல் ஜெய்ஹிந்த் 2 வரை.. தேசப்பற்றை ஊட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அசத்தல் படங்கள்!

    |

    சென்னை: வரும் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தேசப்பற்றை உணர்த்திய நடிகர் அர்ஜூனின் படங்கள் குறித்த தொகுப்பை காணலாம்.

    Recommended Video

    Arjun Sarja heart touching Message for Chiranjeeve Sarja

    ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.

    சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார் அர்ஜூன். பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக பட்டைய கிளப்புவார் நடிகர் அர்ஜூன். அர்ஜூன் நடித்துள்ள பல படங்கள் தேசிய பற்றை உணர்த்தும் வகையிலேயே உள்ளது.

    ஜெய்ஹிந்த்

    ஜெய்ஹிந்த்

    வரும் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் நடிகர் அர்ஜூன் நடித்த தேசப்பற்றை உணர்த்தும் படங்கள் குறித்த தொகுப்பை காணலாம். அதன்படி அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது ஜெய்ஹிந்து படம். இந்தப்படத்தில் ஏசிபி பரத் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் அர்ஜூன் 1994 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருப்பார். மேலும் செந்தில், கவுன்டமணி, வாகை சந்திரசேகர், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படத்தை நடிகர் அர்ஜூனே இயக்கினார்.

    குருதிப்புனல்

    குருதிப்புனல்

    அடுத்து குருதிப்புனல் திரைப்படம்.. இந்தப் படம் 1995ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்கினார். இந்தப் படத்தில் கமல் ஹாசன், அர்ஜூன், நாசர், கவுதமி உள்ளிட்ட பலர் நடித்தனர். பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படம் தீவிரவாதத்திற்கு எதிரான வகையில் காட்சியாக்கப்பட்டிருக்கும். இதில் அபாஸ் என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார் அர்ஜூன்.

    செங்கோட்டை

    செங்கோட்டை

    அடுத்த செங்கோட்டை.. அர்ஜூன், மீனா, ரம்பா, விஜயக்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் தேச விரோத சக்திகளிடம் இருந்து நாட்டின் பிரதமரை காப்பாற்றும் ஐபிஎஸ் அதிகாரியாக அர்ஜூன் நடித்தார். காதலியான ரம்பா இறந்த பிறகு தன்னையே நினைத்து வாழும் சிறை கைதியான மீனாவை திருமணம் செய்து கொள்வார் அர்ஜூன்.

    முதல்வன்

    முதல்வன்

    அடுத்து முதல்வன்.. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் ஹிட்டானது. இந்தப் படத்தில் அர்ஜூனுக்கு வில்லனாக மறைந்த நடிகர் ரகுவரன் நடித்தார். இதில் புகழேந்தி கேரக்டரில் ஊழலுக்கு எதிராக ஒருநாள் முதல்வராக இருந்து புரட்சி செய்வார். ஊழல்வாதிகளை களையெடுப்பது, ரவுடிசத்தை ஒழிப்பது என நாட்டை நல்வழிப்படுத்தும் இளம் முதல்வராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் அர்ஜூன்.

    ஒற்றன்

    ஒற்றன்

    அடுத்து ஒற்றன்.. ஒற்றன் படத்தில் ரா அமைப்பின் ஏஜென்ட்டாக நடித்திருப்பார் நடிகர் அர்ஜூன். இதில் சிம்ரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தனர். 2003ஆம் ஆண்டு வெளியான இப்படம் நாட்டை சீர்குலைக்க தயாராக இருக்கும் ஒரு தேசிய விரோத கும்பலை கண்டுபிடிப்பதும் பாராளுமன்றம் மற்றும் கோயில் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதியை பிடிப்பதுமாக படமாக்கப்பட்டிருக்கும்.

    வந்தே மாதரம்

    வந்தே மாதரம்

    அடுத்து வந்தே மாதரம்.. மம்மூட்டி, அர்ஜுன், ஸ்நேகா, ஷ்ரதா ஆர்யா, ராஜ்கபூர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2010ஆம் ஆஷ்டு வெளியான இப்பபடம் விவசாயிகளின் பிரச்சனைகளையும், அது தொடர்புடைய சமூக வன்முறைகளையும் ஆராய்ந்து, அதை சரிசெய்ய முயற்சிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு தீவிரவாத அமைப்புகள் எப்படியான இடையூறுகளை கொடுக்கிறது என்பதும் அதனை அதிகாரிகள் முறியடித்து எப்படி நாட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை ஆகும்.

    ஜெய்ஹிந்த் 2

    ஜெய்ஹிந்த் 2

    அடுத்து ஜெய் ஹிந்த் 2.. 2014ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடக்கூடிய ஒருவரின் போராட்டமே படத்தின் கதை. இந்தப் படத்தில் அர்ஜூன், சுர்வீன்ன சாவ்லா. ராகுல் தேவ், சிம்ரன் கபூர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

    English summary
    Actor Arjun's top patriotic films in Tamil Cinema. From Jaihind to Jaihind 2 many movies Arjun stared.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X