Arjun: படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த அர்ஜூன்.. கேரியரை மாற்றிய படம்!

சென்னை: நடிகர் அர்ஜூன் பல ஆண்டுகளாக ஹீரோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் அர்ஜூன். அவரது கேரக்டர் கிளிம்ப்ஸ் கடந்த 15ம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி வெளியானது. இந்த கிளிம்ப்ஸ் ஒரே நாளில் 8 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

Actor Arjun says that Gentleman movie changed his decision about acting in movies

நடிகர் அர்ஜூனின் நடிப்பு குறித்த முடிவை மாற்றிய ஜென்டில்மேன்: நடிகர் அர்ஜூன் கடந்த 1981ம் ஆண்டில் வெளியான சிம்மதா மரி சைன்யா என்ற படத்தின்மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் நன்றி என்ற படத்தின்மூலம் அறிமுகமான அர்ஜூனுக்கு 1985ம் ஆண்டில் வெளியான யார் படம் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து தமிழ், கன்னடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தேசப்பற்றை வெளிப்படுத்தும் படங்களில் இவர் தொடர்ந்து நடித்து தேசப்பற்று நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார்.

சங்கர் குரு, தாய் மேல் ஆணை, படிச்ச புள்ள, சேவகன், ஜென்டில்மேன் என பல படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அர்ஜூன் தற்பேது 60 வயதை கடந்துள்ள நிலையிலும், இளம் நாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய பிட்னசை மெயின்டெயின் செய்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன. தன்னுடைய மகளை வைத்து ஒரு படத்தை இயக்கியும் வருகிறார் அர்ஜூன். தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

விஜய், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் என லியோ படத்தில் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் அர்ஜூனும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். கடந்த 15ம் தேதி அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி படத்தில் அவரது கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியானது. படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் அர்ஜூன். இதனிடையே அவரது கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்த கிளிம்ப்ஸ் ஒரே நாளில் 8 லட்சம் லைக்ஸ்களை பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது 11 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை வடிவமைத்த லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தில் அர்ஜூனை மாஸாக காட்டியுள்ளார். படத்தில் சஞ்சய் தத்திற்கு தம்பியாக அர்ஜூன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அர்ஜூன், ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாக தற்போது கூறப்பட்டுள்ளது.

Actor Arjun says that Gentleman movie changed his decision about acting in movies

ஆரம்ப காலகட்டத்தில் அர்ஜூன் எதிர்பார்த்த சக்சஸ் சினிமாவில் கிடைக்காததால், தானே தன்னுடைய சொந்த காசில், படம் இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார் அர்ஜூன். சேவகன் என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் தான், அர்ஜூனிடம் ஷங்கர் ஜென்டில்மேன் படத்தின் கதையை சொல்லியுள்ளார். அந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஓகே சொன்னாராம் அர்ஜூன்.

இந்த முடிவு அர்ஜூனுக்கு சிறப்பாக அமைந்தது. அவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஜென்டில்மேன். தொடர்ந்து பல சக்சஸ் படங்களில் நடித்துள்ளார் அர்ஜூன். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹரோல்ட் கேரக்டர் படத்தில் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர்170 படத்திலும் அர்ஜூன் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X