தமிழ், கன்னடம் ஓகே... தெலுங்கில் மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் ஹீரோ... தானே இயக்கவும் முடிவு
சென்னை: தமிழ், கன்னடத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் தனது மகளை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளார் அந்த ஹீரோ.
பிரபல நடிகர் அர்ஜுன். ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் இவர், இப்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா.
இவர் தமிழில், 'பட்டத்து யானை' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

பூபதி பாண்டியன்
விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் சந்தானம், முரளி சர்மா, ஜான் விஜய், சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்திருந்தனர். பூபதி பாண்டியன் இயக்கி இருந்தார்.

சொல்லிவிடவா
இதையடுத்து அவர் 'சொல்லிவிடவா' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதை நடிகர் அர்ஜுன் தயாரித்து, இயக்கி இருந்தார். சந்தன் குமார் ஹீரோவாக நடித்திருந்தார்.

கன்னடத்திலும்
மற்றும் சுகாசினி, பிரகாஷ்ராஜ், கே.விஸ்வநாத் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கன்னடத்திலும் வெளியானது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பெரிதாக பேசப்படவில்லை. இதற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

தெலுங்கு அறிமுகம்
இந்நிலையில் மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறார் அர்ஜுன். இந்தப் படத்தை அவரே இயக்க உள்ளார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். தெலுங்கில் முன்னணியில் உள்ள இளம் ஹீரோ ஒருவரை இதில் நடிக்க வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











