நடிகர் அர்ஜுனின் வித்தியாசமான வீக் எண்ட்..இவரா இப்படி?எதிர்பார்க்காத செயலால் குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் அர்ஜூன்.
அதிகமான ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள அர்ஜூன், ஆக்ஷன் கிங் என தன்னுடைய ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
தொடர்ந்து நடிப்பு, இயக்கம் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுவருகிறார் அர்ஜூன். தன்னுடைய மகளை வைத்து தற்போது படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் அர்ஜூன்
நடிகர் அர்ஜூன் அதிகமான ஆக்ஷன் படங்களில் நடித்து அதன்மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக ஆக்ஷன் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர். ரீலில் மட்டுமில்லாமல் ரியலிலும் இவர் ஆக்ஷன் கிங் தான் என்பதை நிரூபித்தவர். கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர் அர்ஜூன். இவரது பல படங்கள் ஆக்ஷனுக்காகவே சிறப்பான வெற்றியை பெற்றவை.

அர்ஜூன் சிறப்பான படங்கள்
தமிழில் இவரது நடிப்பில் வெளியான முதல்வன், ஜென்டில்மேன், ரிதம் போன்ற படங்களில் இவரது வித்தியாசமான மற்றும் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் இவரை கொண்டாடினர். குறிப்பாக முதல்வன் படத்தில் இவரது சிறப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மனிஷா கொய்ராலா அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இயக்குநராக அர்ஜூன்
தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன். இயக்கத்திலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இவரது படங்களில் நாட்டுப்பற்று அதிகமாக காணப்படும். அத்தகைய காட்சிகள் தன்னுடைய படங்களில் இடம்பெறுவதை இவர் விருப்பத்துடன் செயல்படுத்தினார். தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன்.

தெலுங்கில் படமியக்கும் அர்ஜூன்
இதனிடையே தன்னுடைய மகளை வைத்து தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லனாகவும் ஒருசில படங்களில் அர்ஜூன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களிலும் அர்ஜூனை ஆக்டிவாக பார்க்க முடிகிறது. வாரயிறுதிகளில் தான் வீட்டில் செய்யும் செயல் குறித்த வீடியோவை தற்போது அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தான் வளர்க்கும் மாடுகளை சுத்தம் செய்து பராமரிக்கும் செயலை அர்ஜூன் செய்கிறார். அந்த மாடுகளுக்கு புன்யா, வேதா, கிருஷ்ணா மற்றும் ராதே என அந்த மாடுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்
பெரிய நடிகர் என்ற பந்தா சிறிதுமின்றி அர்ஜூன் அந்த மாடுகளை சுத்தம் செய்யும் இந்த வீடியோவிற்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 60 வயதை கடந்த நிலையிலும் அர்ஜூன் பிட்டாக இருப்பதற்கு இதுபோன்ற வேலைகளிலும் அவர் தன்னுடைய கவனத்தை அதிகமாக செலுத்துவதுதான் காரணமா என்பதுபோன்ற கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











