Actor Arjun: விரைவில் சூட்டிங் முடிஞ்சிடும்.. அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் அப்டேட் கொடுத்த அர்ஜுன்!

சென்னை: நடிகர் அஜித், அர்ஜுன் திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு மாத காலங்களாக படம் ஷூட்டிங் நடத்தப்படாமல் முடங்கிய நிலையில் வரும் 20ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு மாத காலம் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசாபைஜானில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் இன்னும் 30 சதவிகித சூட்டிங் மட்டுமே மீதம் உள்ளதாக படத்தில் வில்லனாக இணைந்துள்ள நடிகர் அர்ஜுன் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ajith Vidaamuyarchi movie Arjun Azerbaijan tamil cinema

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்டு, இடைவெளி இல்லாமல் நடத்தப்பட்டது. ஆனால் அங்கு நிலவிய சில கால சூழல் மற்றும் சில நிதி பிரச்சினைகள் காரணமாக இந்த படம் கடந்த ஆறு மாதங்களாக சூட்டிங் நடத்தப்படாமல் முடங்கியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். படம் குறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில் வரும் 20ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் அசர்பைஜானிலேயே மீண்டும் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அசர்பைஜான் செல்லும் அஜித்: விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக வரும் 18ம் தேதி நடிகர் அஜித் அசர்பைஜான் பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த சூட்டிங்கில் அஜித் இணைய மாட்டார் என்றும் படத்தில் 50 சதவிகித சம்பள பாக்கி உள்ளதால் அதை வாங்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் இதை தொடர்ந்து வரும் 18ம் தேதி நடிகர் அஜித் அசர்பைஜான் பயணமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து படத்தில் வில்லனாக இணைந்துள்ள நடிகர் அர்ஜுன் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

அர்ஜுன் அப்டேட்: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பல முன்னணி நடிகர்கள் இந்த திருமணத்தில் இணைந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அர்ஜுன் விடாமுயற்சி படம் குறித்து தன்னுடைய பேட்டியில் பேசியுள்ளார். படத்தில் இன்னும் 30 சதவிகித சூட்டிங் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் இந்த மாதம் இந்த படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்க உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவருக்கும் அஜித்திற்கும் இடையில் மாஸான காட்சிகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லாவற்றையும் இப்போதே கூறிவிடுவார்களா என்று பதிலுக்கு காமெடியாக பேசியதையும் பார்க்க முடிந்தது.

அஜித்துடன் இணையும் அர்ஜுன் -திரிஷா: தொடர்ந்து படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலையில் வரும் 20ம் தேதி அசர்பைஜானில் துவங்கவுள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் தானும் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூட்டிங்கில் நடிகை திரிஷாவும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து ஒருமாத காலம் அசர்பைஜானிலேயே படக்குழுவினர் தங்கியிருந்து சூட்டிங்கை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே ஜூலை முதல் வாரத்தில் சில தினங்கள் அஜித் தன்னுடைய சொந்த வேலைகள் காரணமாக சென்னை வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X