Arun Vijay: அருண் விஜய்யை அழவைத்த ரசிகர்கள்.. காரணம் பாலா தான்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் அருண் விஜய் -இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் படம் நேற்றைய தினம் பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரசாத் நடித்துள்ள நிலையில் சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
படம் நேற்றைய தினம் ரிலீசாவதில் சிறிது தாமதமான நிலையில் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்தடுத்த காட்சிகளில் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சில ஆண்டுகளாக இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த பாலாவிற்கு இந்தப் படம் சிறப்பான கம்பேக்காகவே பார்க்கப்படுகிறது.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய், ரோஷினி பிரசாத், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஜான் விஜய், ராதாரவி, சிங்கம்புலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வணங்கான் படத்தை இயக்கியுள்ளார் பாலா. அவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிக்காக போராடிய நிலையில் நல்ல விமர்சனங்களை மட்டுமே பெற்று வசூலில் கோட்டை விட்டன. இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் உருவாகி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது வணங்கான். இந்தப்படத்தில் நடித்தது தன்னுடைய கனவு நனவான தருணம் என்று அருண் விஜய் முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
வணங்கான் படத்தின் கதைக்களம்: இந்தப் படத்தின் ஒன் லைனை முன்னதாக பாலா தன்னுடைய பேட்டியொன்றில் கூறியிருந்தார். ஒரு ரகசியம் வெளியில் தெரியவந்தால் பலருக்கும் பிரச்சினை, ரகசியம் மறைக்கப்பட்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. இந்த நிலையில் ஹீரோ எடுக்கும் முடிவை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். படத்தில் அருண் விஜய் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ள நிலையில் அவரது நடிப்பை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் நேற்றைய தினம் சில காரணங்களால் தாமதமாக துவங்கப்பட்டது. இந்த விஷயம் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
முதல் நாள் வசூல்: ஆயினும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் ஏராளமான ரசிகர்களை படம் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஷங்கரின் கேம் சேஞ்சர், மெட்ராஸ்காரன் படங்கள் வெளியான நிலையில், அதையும் தாண்டி வணங்கான் படம் கல்லா கட்டியுள்ளது.
கண்கலங்கிய அருண் விஜய்: இந்நிலையில் நேற்றைய தினம் பிரபல தியைரங்கில் ரசிகர்களுடன் சென்று அருண் விஜய் படத்தை பார்த்துள்ளார். முன்னதாக அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். மேலும் ஏவி (அருண் விஜய்) என அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இவற்றையெல்லாம் பார்த்த அருண் விஜய் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இதற்கெல்லாம் காரணமான பாலாவிற்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன்மூலம் தன்னுடைய கனவு நனவானதாக அவர் கூறியுள்ள நிலையில், அந்தக் கனவுக்கு ரசிகர்களும் வரவேற்பை தெரிவித்துவருவது அவரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











