Good Bad Ugly: LCUவில் இருக்கும் வில்லாதி வில்லன்.. இப்போ குட் பேட் அக்லி படத்திலும் இருக்காரு!
சென்னை: அஜித்குமார் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது. இவர் நடித்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், இவரது ரசிகர்கள் மிகவும் கவலையாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். இவரது நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார். அதேநேரத்தில் மைத்ரி மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி என்ற கேங்க்ஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இந்தப் படம் குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவிலேயே தனக்கென தனி சினிமா பாணியைக் கொண்டுள்ள நடிகர் என்றால் அது அஜித்குமார்தான். அவர் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என போஸ்டரைப் பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். அஜித்குமார் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி 32 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி டீம் வெளியிட்ட மற்றொரு போஸ்டர் உலகம் முழுவதும் செம ட்ரெண்ட் ஆனது. அதற்கு நன்றி சொல்லி வெளியிட்ட போஸ்டர் முந்தைய போஸ்டரை விட சிறப்பாக இருந்ததால் அஜித் ரசிகர்கள் வெறியாகிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இப்போது அஜித் ரசிகர்களே விடாமுயற்சி படத்தினை மறந்துவிட்டார்கள். குட் பேட் அக்லி படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை புல்லரிக்கச் செய்கின்றது. குறிப்பாக படத்தின் போஸ்டர்களை வெளியிடுவதை படக்குழு நிறுத்திக் கொண்டாலும், படப்பிடிப்புத் தளத்தில் அஜித்குமாரின் நியூ லுக் புகைப்படங்களை இணையத்தில் லேசாக தட்டிவிட்டு வருகின்றது. இது வேகமாக பரவுவது மட்டும் இல்லாமல், இதுவரை அஜித்தை இப்படிப் பார்த்ததில்லை என அனைவரும் கூறும் அளவிற்கு சிறப்பாக உள்ளது.

வில்லாதி வில்லன்: குட் பேட் அக்லி படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இப்போது வரை இருந்து கொண்டே உள்ளது. படத்தில் அஜித் மாஸான கேங்ஸ்டர் என்றால் அவருக்கு வில்லன் யார்? அஜித்தே வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்றால், அவரை எதிர்த்து நிற்கும் வில்லாதி வில்லன் யார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கின்றது.

குட் பேட் அக்லி: இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் குட் பேட் அக்லி படத்தில் தான் நடித்திருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்தார். இது பலருக்கும் செம சர்ப்ரைஸாக இருந்தது. காரணம் அஞ்சாதே படத்திற்குப் பின்னர், வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கப்போகின்றார் என பேச்சுகள் எழுந்தது. இப்போது படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் வில்லன் கதாபாத்திரத்திற்கோ அல்லது நெகடிவ் கதாபாத்திரத்திற்கோ கச்சிதமாக பொருந்திப் போகக்கூடிய நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்திருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

சினிமா வாய்ப்பு: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், " நான் முதன்முதலாக சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தப்போது அஜித் சாரின் மேலாளரான சுரேஷ் சந்திரா சார் டீமில் வேலைசெய்யும் வாய்ப்பினைப் பெற்றேன். அதன் மூலம் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அஜித் சாருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவருடன் ஷூட்டிங் செல்வது, பட புரோமோசன்களில் ஈடுபடுவது, படங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வது போன்ற வேலைகளைச் செய்தேன். வீரம் படத்தின் டீசரை அப்லோட் செய்ததே நான் தான்.

அஜித்: என்னை ரசிகர்கள் பலமுறை, ' நான் எப்போது அஜித் சாருடன் இணைந்து பணியாற்றவுள்ளேன்' என கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு இப்போது பதில் சொல்கின்றேன். நான் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கின்றேன். நான் மாஸ்டர் படத்தில் நடித்ததைப் பார்த்துவிட்டு அஜித் சார் எனக்கு போன் செய்து வாழ்த்தியது மட்டும் இல்லாமல், விரைவில் இணைந்து பணியாற்றலாம் எனவும் கூறினார். இந்த வாய்ப்பினைக் கொடுத்த என் மீது நம்பிக்கை வைத்த, அஜித் சார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சுரேஷ் சந்திரா சார் ஆகியோருக்கு நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். அர்ஜுன் தாஸின் இந்தப் பதிவு கோலிவுட் வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகின்றது. அர்ஜுன் தாஸ் LCU வில் மிகவும் முக்கியமான வில்லனாக உள்ளார்.



Click it and Unblock the Notifications











