Arjun: ஒரு மில்லியன் லைக்ஸை தட்டித் தூக்கிய ஹெரால்ட் தாஸ்.. வியூஸ் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் அடுத்தமாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப்படத்தில் விஜய்யுடன் கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன.

யூடியூபில் 1 மில்லியன் லைக்ஸ்களை கடந்த ஹெரால்ட் தாஸின் கிளிம்ப்ஸ்: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் 19ம் தேதி படத்தின் ரிலீஸ் சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களையும் ஒருபுறம் படக்குழுவினர் செய்து வருகின்றனர். முன்னதாக காஷ்மீர் சூட்டிங் நிறைவையடுத்து படத்தின் சூட்டிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
காஷ்மீர் சூட்டிங்கில் மிகுந்த குளிர் மற்றும் நிலநடுக்கத்திற்கிடையில் நடத்தப்பட்ட சூட்டிங் குறித்து இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தின. தொடர்ந்து விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் போன்றவர்களின் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களையும் படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர். நா ரெடி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அதிகமான வியூஸ்களை பெற்று யூடியூபில் அதிரடி சரவெடியாக காணப்படுகிறது.
படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் இருவரும் சகோதரர்களாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் பிறந்தநாட்கள் அடுத்தடுத்து வந்த நிலையில் படத்தில் அவர்களின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றன. படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் சஞ்சய் தத்தும் அவரது தம்பியாக ஹெரால்ட் தாஸ் கேரக்டரில் அர்ஜூனும் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில், ஹெரால்ட் தாஸாக படத்தில் நடித்துள்ள அர்ஜூனின் கேரக்டர் கிளிம்ப்ஸ் யூடியூபில் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் தற்போது 17 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் இந்த கிளிம்ப்ஸ் தற்போது 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று மாஸ் காட்டி வருகிறது. இந்திய அளவில் மிகவும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில் இந்த வீடியோவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
லியோ படத்தில் விஜய்யின் சகோதரராக அர்ஜூன் நடித்துள்ளதாகவும் அவர்கள் இருவருக்கும் இடையிலான காட்சிகள் மிகச்சிறப்பாக அதிரடி ஆக்ஷன் களத்தில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் இறுதி 20 நிமிடங்கள் மிகவும் சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் எனவும் படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். படத்தில் விஜய் மற்றும் அர்ஜுன் காம்பினேஷன் காட்சிகள் மிரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











