Actor Ajith: அதிரடி லுக்கில் மாஸ் காட்டும் நடிகர் அர்ஜூன்.. அஜித் எடுத்த புகைப்படம்?
சென்னை: நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங்கும் அசர்பைஜானிலேயே நடந்து வருகிறது.
ஆக்ஷன் ஜானரில் எடுக்கப்பட்டுவரும் விடாமுயற்சி சூட்டிங்கின் அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிக்ள, கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் அஜித்: நடிகர் அஜித் -ஹெச் வினோத் கூட்டணியில் கடந்த ஜனவரியில் வெளியானது துணிவு படம். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த மே மாதத்தில் அவரது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கிவருகிறார்.

அசர்பைஜானில் சூட்டிங்: மே மாதத்திலேயே விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு மேற்கொள்ள பட்ட நிலையில் கடந்த அக்டோபரில்தான் இதன் சூட்டிங் துவங்கப்பட்டது. முதல்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் துவங்கி கடந்த சில வாரங்களாக நடந்தது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள், அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகள் இந்த முதல்கட்ட சூட்டிங்கில் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கியுள்ளது.
கார் சேஸிங் காட்சிகள்: இந்த சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம்வரையில் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கில் முதல் 15 நாட்கள் கார் சேஸிங் காட்சிகளை மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து மற்ற காட்சிகளின் சூட்டிங் அங்கேயே நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அஜித், அர்ஜூன், ஆரவ் மற்றும் திரிஷா இணைந்து கார் சேஸிங் காட்சியில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன.
அஜித் -அர்ஜூன் கூட்டணி: இந்நிலையில் இந்த சூட்டிங்கின்போது அஜித்துடன் இணைந்து அர்ஜூன், ஆரவ் இருவரும் ஹோட்டலில் சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். இவர்கள் இணைந்து சாப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளன. இந்த புகைப்படங்களில் மூவரும் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காணப்படுகின்றனர். மங்காத்தா படத்தை தொடர்ந்து இநத்ப் படத்தில் அஜித்துடன் அர்ஜூன் விடாமுயற்சியில் இணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூனை புகைப்படம் எடுத்த அஜித்?: இந்நிலையில் இந்த புகைப்படங்கள் மூலம் அர்ஜூனின் விடாமுயற்சி பட லுக்கும் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் மாஸ் காட்டியிருந்த அர்ஜூன், தற்போது அஜித்துடன் இணைந்துள்ளார். இவர் சிறப்பான ஹேர்ஸ்டைலுடன் காணப்படும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த புகைப்படத்தை நடிகர் அஜித்தான் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தன்னுடைய சக நடிகர்களை இதுபோல அஜித் புகைப்படம் எடுத்து வெளியிடுவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது இந்தப் புகைப்படத்தையும் அஜித் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











