திவ்யா என்னை பழிவாங்கி விட்டாள்..இப்ப சந்தோஷமா..புழல் சிறையில் அர்னவ்!
சென்னை : நடிகை திவ்யா அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேளடி கண்மணி சீரியல் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திவ்யா.
கடந்த மாதம் அர்னவை திருமணம் செய்து கொண்ட போட்டோவை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால்,பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

நடிகை திவ்யா
நடிகை திவ்யா ஸ்ரீ தனது கணவர் அர்னவ், திருமணமான போட்டோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதில் இருந்தே என்னை டார்ச்சர் செய்து வருகிறார். செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் தொடர்புவைத்துக் கொண்டு, அவருடன் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார். இதை கேள்வி கேட்டதால்,கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தன்னை அடித்துவிட்டதாக நடிகை திவ்யா கதறி அழுதபடி புகார் கூறியிருந்தார்.

அர்னவ் மீது வழக்குப்பதிவு
நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை அழைக்கப்பட்டார்.

கைது செய்த போலீசார்
ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல், கண்ணில் பிரச்சனை இருப்பதால் ஆஜராக முடியாது என்று அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால் அர்னவிற்கு உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை அவர் விசாரணைக்கு பயந்து இப்படி ஒரு பொய்யை சொல்லுவது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து , படப்பிடிப்பில் இருந்த அர்னவை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு
இதையடுத்து,அர்னவ்வை மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்திய போலீசார், விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். மேலும், அவரை வரும் 28ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்ப சந்தோஷமா?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்னவ், தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் மீது திவ்யா இப்படி ஒரு புகாரை அளித்திருப்பதாகவும், நன்றாக பழிவாங்கி விட்டாள், திவ்யா இப்ப சந்தோஷமா எனவும் அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.


Click it and Unblock the Notifications











