திருமண ஆசைக்காட்டி நடிகையிடம் உல்லாசம்.. ஏமாற்றிய நடிகர் கைது.. சிறையில் அடைப்பு

By

சென்னை: திருமண ஆசைக்காட்டி, நடிகையிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றியதாக நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

LOCKDOWN | குட்டிஸ் என்ன படம் பாக்கலாம் | Filmibeat Tamil

திருமண ஆசைக் காட்டி பெண்களை ஏமாற்றுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சினிமாவிலும் இது தொடர்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு நடிகை ஒருவர், தன்னைத் திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றியதாக ஒளிப்பதிவாளர் மீது புகார் கூறியிருந்தார்.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்

இந்நிலையில், இப்போது நடிகை ஒருவர், நடிகர் மீது புகார் கொடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் அவர். சசிகுமார் நடித்த படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறி இருப்பதாவது:

காதலித்து வந்தோம்

காதலித்து வந்தோம்

நான் சினிமாவில் நடித்து வருகிறேன். எனக்கு, 'தரிசு நிலம்' என்ற படத்தில் நடித்துள்ள சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தியாகராஜன் (32) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நட்பாக பழகினோம். பின்னர் இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்கிறார்.

உல்லாசமாக

உல்லாசமாக

2011-ம் ஆண்டு முதல் எங்கள் காதல் தொடர்ந்து வந்தது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவந்தார். இதனால் நான் அவருடன் நெருங்கி பழகி வந்தேன். இதையடுத்து நாங்கள் பல முறை உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில், தியாகராஜன் என்னை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது.

ஆசைக்காட்டி

ஆசைக்காட்டி

செல்போனில் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருந்தவர், என்னிடம் பேசுவதையும் நிறுத்தினார். என்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திடீரென்று கூறினார். இதுபற்றி பேசினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி மோசம் செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இதையடுத்து பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தியாகராஜன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X