மிரட்டும் தேஜாவு படத்தின் டீசர்... எப்போ சார் ரிலீஸ் செய்வீங்க... ரசிகர்கள் கேள்வி

சென்னை : நடிகர் அருள்நிதி எப்போதும் த்ரில்லர் வகை படங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்.

அவரது நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

இந்நிலையில் தற்போது தேஜாவு என்ற த்ரில்லர் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் அருள்நிதி

நடிகர் அருள்நிதி

நடிகர் அருள்நிதி எப்போதுமே த்ரில்லர் வகை படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருபவர். அவருடைய நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி உள்ளிட்ட படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற படங்கள். இத்தகைய படங்களுக்கு தக்கபடி அவர் தனது பாடி லாங்குவேஜ்ஜையும் சிறப்பாக உருவாக்கிக் கொள்வார்.

தேஜாவு படம்

தேஜாவு படம்

இந்நிலையில் தற்போது அவர் தேஜாவு என்ற த்ரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தை வைட் கார்பட் ஃபிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா வொர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

முக்கிய வேடத்தில் மதுபாலா

முக்கிய வேடத்தில் மதுபாலா

இந்தப் படத்தில் அருள்நிதியுடன் மதுபாலா, அச்சுயுத் குமார், ராகவ் விஜய், சேத்தன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி, சுப்ரமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

அருள்நிதியின் முந்தைய த்ரில்லர் படங்கள் கொடுத்துள்ள வெற்றியை அடுத்து இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது. விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.

காவல் அதிகாரியாக அருள்நிதி

காவல் அதிகாரியாக அருள்நிதி

படத்தில் காவல் அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ளார். டீசரின் காட்சிக்கு காட்சி தனக்கு ஸ்டப் கொடுக்கும் ஒரு கிரிமினல் குறித்து அருள்நிதி பேசுவதாக காணப்படுகிறது. தொடர்ந்து ஒரு விஷயம் எளிதாக முடிந்தால் அதில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கும் என்று அவர் கேட்பதாகவும் டீசரில் காணப்படுகிறது.

தேஜாவு தலைப்பு

தேஜாவு தலைப்பு

தேஜாவு என்றால் பிரெஞ்ச் மொழியில் ஏற்கனவே நடந்தது என்று அர்த்தம். நமக்கு தற்போது நடக்கும் செயல்பாடுகள் ஏற்கனவே நடந்தது போல நாம் அனைவருக்குமே ஒரு காலகட்டத்தில் தோன்றும். அந்த வகையில் இந்தப் படத்திற்கு தேஜாவு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X