Arulnidhi :கழுவேத்தி மூர்க்கன் ஒரு வாரத்தில் செய்துள்ள வசூல்.. அப்டேட் இதோ!

சென்னை : நடிகர் அருள்நிதி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது கழுவேத்தி மூர்க்கன்.

இயக்குநர் கவுதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் படம் மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது. டி இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து த்ரில்லர் ஜானர்களில் நடித்துவந்த அருள்நிதி, வம்சம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார்.

Actor Arulnidhis Kazhuvethi moorkkan movie collects more than 3 crores in just one week

ஒரு வாரத்தில் கழுவேத்தி மூர்க்கன் செய்துள்ள வசூல் :நடிகர் அருள்நிதி தொடர்ந்து த்ரில்லர் ஜானர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் திருவின் குரல் படம் ரிலீசானது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது கழுவேத்தி மூர்க்கன் என்ற கிராமத்து கதையில் நடித்துள்ளார் அருள்நிதி. வம்சம் படத்தை தொடர்ந்து இடையில், கிராமத்து கெட்டப்பில் நடிக்காத அவர், இந்தப் படம்மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டில் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி என்ற படத்தை இயக்கி சிறப்பான வரவேற்பை பெற்ற கவுதம ராஜ் தற்போது, அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தை இயக்கியுள்ளார். கடந்த வாரத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

டி இமான் இசையில் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. கழுவேத்தி மூர்க்கன், சாதி அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த தயாநிதி அழகிரி, படம் குறித்த சிறப்பான விமர்சனத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் இந்தப் படம் பெஸ்டாக அமைந்துள்ளதாகவும் அவரை நினைத்தால் பெருமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சந்தோஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி தற்போது ஒரே வாரத்தில் மூன்று கோடி ரூபாய் வரையில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வாரயிறுதியில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து க்ரைம் திரில்லர் ஜானரிலும் நகர்ப்புறத்தை மையமாக கொண்ட கதைகளிலும் நடித்து வந்தார் அருள்நிதி. அவருக்கு கழுவேத்தி மூர்க்கன் வித்தியாசமான பின்னணியில் அமைந்துள்ளது. அளவுக்கு அதிகமான கேரக்டர்களை வைக்காமல், குறைவான கேரக்டர்களிலேயே தான் சொல்ல விரும்பிய கருத்தை இயக்குநர் முன் வைத்திருக்கிறார். ஆனாலும் திரைக்கதையில் அவர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக டிமாண்டி காலனி 2 படத்தில்தான் அருள்நிதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X