மீண்டும் கைக்கொடுத்த ஹாரர் திரில்லர் படம்.. டிமான்டி காலனி 2 படத்தின் சக்சசை கொண்டாடிய டீம்!

நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், எம்எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, மதுமிதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது டிமான்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படம் வெளியான நேரத்திலேயே இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Arulnidhi Demonte colony 2 Ajay Gnanamuthu 2
டிமான்டி காலனி 2 படம்: நடிகர் அருள்நிதி அடுத்தடுத்த தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை சிறப்பாக்கி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் சனந்த், எம்எஸ் பாஸ்கர், மதுமிதா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த டிமான்டி காலனி படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் காமெடி பேய்களுக்கு மத்தியில் மாஸ் காட்டியது. ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வசூலிலும் சாதனை புரிந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே தொடர்ந்து காணப்பட்டன.

2வது பாகம் ரிலீஸ்: வசூலை குவிக்கும் அருள்நிதி: இந்நிலையில் தற்போது ஒன்பது ஆண்டுகளை கடந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக டிமான்டி காலனி 2 படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. விக்ரமின் தங்கலான் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அந்தப் படத்துடன் இணைந்து டிமான்டி காலனி 2 படமும் ரிலீசானது. ஆயினும் தங்கலான் படத்திற்கு அடுத்தபடியாக டிமான்டி காலனி 2 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. கடந்த இரு தினங்களில் இந்த படம் 10 கோடி ரூபாய்க்கும் மேலாக சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Arulnidhi Demonte colony 2 Ajay Gnanamuthu 2

சக்சஸ் மீட்: சக்சஸ் மீட்: இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அருள்நிதி, அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். படம் மிகச்சிறப்பாக ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. 9 ஆண்டுகள் கழித்து வெளியான போதிலும் இதன் திரைக்கதையை அஜய் ஞானமுத்து சிறப்பாக்கியுள்ளார். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆனால் பாடல்கள் கவனத்தை பெறவில்லை.

சிறப்பான பிளான்: ரசிகர்களை கவர்ந்த அஜய் ஞானமுத்து: முதல் பாதியிலேயே படத்தை முடித்தது போன்ற ஒரு உணர்வை படத்தின் இயக்குநர் கொடுத்துள்ளார். நடிகர்களின் தேர்வில் மட்டுமில்லாமல் சிறப்பான திரைக்கதை மற்றும் பின்னணி இசை என இந்தப்படம் பல ப்ளஸ்களை கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹாரர் திரில்லர் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X