அருள்நிதிக்கு இன்று பிறந்தநாள்.. சமூகவலைத்தளங்களில் குவியும் வாழ்த்து !

சென்னை : மிகப்பெரிய திரைத்துறை பின்புலத்தைக் கொண்டுள்ள நடிகர் அருள்நிதி தனது சொந்த முயற்சியின் மூலம் இன்று வரை தனித்துவமான நடிகராக நிலைத்து வருகிறார்.

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து ஒரு மிகச் சிறந்த நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு வரும் இவர் நடித்த மௌன குரு திரைப்படம் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது.

தனது இயல்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து வரும் அருள்நிதி இன்று தனது 33வது பிறந்தநாளை தன்னுடைய குடும்பம் மற்றும் உறவினர்கள் படைசூழ மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்.

தனக்கென ஒரு அடையாளம்

தனக்கென ஒரு அடையாளம்

திரை பின்புலத்தைக் கொண்டு அறிமுகமாகும் நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களது சொந்த முயற்சியின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

புதுப்புது இயக்குனர்களுடன்

புதுப்புது இயக்குனர்களுடன்

அந்த வகையில் நடிகர் அருள்நிதி மிகப்பெரிய திரைத்துறை பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கிய வம்சம்

பாண்டிராஜ் இயக்கிய வம்சம்

குடும்பப்படங்களை சாயம் மாறாமல் இயக்குவதில் வல்லவரான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அருள்நிதி, நடித்த முதல் படத்திலேயே தன்னை சிறந்த நடிகராக மக்கள் முன்னிலையில் நிலைப்படுத்திக் கொண்டார். புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஆர்வம் காட்டிவரும் அருள்நிதி அறிமுக இயக்குனரான சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு என்ற மெகாஹிட் திரைப்படத்தில் நடித்து பாலிவுட் வரை கவனத்தை ஈர்த்தார்.

 ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில்

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில்

யாரும் சற்றும் எதிர்பாராத கதைக்களத்தில் வெளியான மௌனகுரு திரைப்படம் வெளியாகி தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்து அனைவரையும் ஈர்த்த நிலையில் இந்த படம் தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "அகிரா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்

தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வரும் அருள்நிதி ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், டிமாண்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், k13, இரவுக்கு ஆயிரம் கண்கள் என எதார்த்தமான கதைகளையும் வித்தியாசமான கதைக் களங்களையும் தேர்ந்தெடுத்து தரமான படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு வருகிறார்.

குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன்

குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன்

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நடிகர் அருள்நிதி இன்று தனது 33வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை யொட்டி இவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் இவருக்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X