அருள்நிதியின் அடுத்த அதிரடி..விரைவில் உருவாகிறது டிமான்ட்டி காலனி2 !

சென்னை : டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என படத்தின் நாயகன் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே கதைகளை மிகவும் நேர்த்தியாகவே தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் அருள்நிதி. வருடத்தில் ஏதாவது ஒரு படம் கொடுக்க வேண்டும் என நினைக்கும் நடிகர்களின் மத்தியில் இவரும் ஒருவர்.

எத்தனை வருடம் ஆனாலும் மசாலா இல்லாமல் தரமான கதைகளை கொடுக்க வேண்டும் என நினைத்து தரமான படங்களை கொடுத்து வருகிறார். அதனால்தான் ரசிகர்களின் மனதில் இவருக்கென்று தனி இடம் உண்டு.

அருள்நிதி

அருள்நிதி

வம்சம் தொடங்கி மௌனகுரு, டிமான்டி காலணி, ஆறது சினம் இந்த வருடம் இவருடைய நடிப்பில் ஜூலை மாதம் வெளியான D ப்ளாக், தேஜாவு, டைரி என தொடர்ந்து க்ரைம், த்ரில்லர் ஜனரில் நடித்து வருகிறார் அருள்நிதி. த்ரில்லர் கதை என்றாலே இயக்குநர்களுக்கு பெயர்தான் நினைவு வருகிறதா என நினைக்கத் தோன்றுகிறது.

டிமான்டி காலனி2

டிமான்டி காலனி2

டிமான்டி காலனி2 திரைப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் டிமான்டி காலனி2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் 2-ம் பாகத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார்.

ஹிட்டடித்த திரைப்படம்

ஹிட்டடித்த திரைப்படம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.

வெற்றியை கொடுக்க

வெற்றியை கொடுக்க

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா ஆகஸ்ட் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.ரூ.100 கோடி பட்ஜெட்டில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாத காரணத்தால் ரூ.83 கோடி மட்டுமே வசூலித்தது. கோப்ரா படம் தோல்வி அடைந்ததால் அடுத்த வெற்றியை கொடுக்க டிமான்டி காலனி2 திரைப்படத்தை இயக்குநர் கையில் எடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X