Arulnithi : வெளியானது அருள்நிதியின் திருவின் குரல் ட்ரெயிலர்.. சும்மா அதிருதுல்ல!
சென்னை : கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி தன்னுடைய படங்களின்மூலம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் அருள்நிதி.
கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் அடுத்துடுத்து டி பிளாக், டைரி, தேஜாவு என மூன்று படங்கள் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது.
தற்போது டிமாண்டி காலனி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள திருவின் குரல் படத்தில் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அருள்நிதியின் திருவின் குரல்
நடிகர் அருள்நிதி எப்போதும் கதைத்தேர்வில் மிகுந்த கவனத்துடன் காணப்படுகிறார். அவரது அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் அருள்நிதி நடிப்பில் டி பிளாக், டைரி, தேஜாவு என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. அருள்நிதியின் இயல்பான நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

மெடிக்கல் க்ரைம் திரில்லர்
இந்நிலையில் மெடிக்கல் க்ரைமை அடிப்படையாக கொண்டு அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ளது திருவின் குரல். ஹரீஷ் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா ராபர்ட், மேனகா சிவா, அஷ்ரப், ஏஆர் ஜீவா, ஹரீஷ் சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

மிரட்டும் ட்ரெயிலர்
வாய் பேச முடியாத, செவித்திறன் குறைபாடு கொண்ட கேரக்டரில் அருள்நிதி நடித்துள்ளார். த்ரில்லர் மற்றும் பேய்ப் படங்களில் நடிப்பது என்றால் அருள்நிதிக்கு அல்வா சாப்பிடுவது போல. அந்த வகையில் இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது ட்ரெயிலரில் வெளிப்பட்டுள்ளது. ட்ரெயிலர் முழுக்க மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகமாக காண முடிகிறது. அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 14ல் ரிலீஸ்
படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டில் அருள்நிதி நடிப்பில் வெளியான மூன்று படங்களும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்குகளில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி ரிலீசாகவுள்ள திருவின் குரலும் அந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் ட்ரெயிலர் வெளியீட்டின்மூலம் தங்களது ப்ரமோஷனை தற்போது படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
முன்னதாக திருவின் குரல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலரும் மிரட்டலான வகையில் வெளியாகியுள்ளது. போஸ்டர்கள், ட்ரெயிலர் ஆகியவை மட்டுமில்லாமல் அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள படம் என்பதும் இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அருள்நிதி நடித்துவரும் டிமாண்டி காலனி படத்தின் அப்டேட்கள் குறித்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











