Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அருள்நிதியின் டைரி படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்... ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு!
சென்னை : நடிகர் அருள்நிதி தன்னுடைய வித்தியாசமான கதைத்தேர்வு மற்றும் தொடர் வெற்றிகளால் ஏராளமான ரசிகர்களை கோலிவுட்டில் பெற்றுள்ளார். அவரது மௌனகுரு உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றவை. இந்நிலையில் அவரது அடுத்தப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
'ஜெய்
பீம்’வழக்கு
சர்ச்சையில்
சிக்கினாலும்...
சூர்யா,
ஜோதிகாவுக்கு
கிடைத்த
ஆறுதல்
தரும்
செய்தி

நடிகர் அருள்நிதி
நடிகர் அருள்நிதியின் படங்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தன்னுடைய சிறப்பான கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு உள்ளிட்டவற்றால் அவர் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அதிகமான படங்களில் இல்லாமல் சிறப்பான படங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த சிறப்பான படங்கள்
அந்த வகையில் அவரது வம்சம், மௌன குரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், கே 13 உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் இந்தப் படங்களின் கேரக்டர்களுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். தொடர்ந்து இவர்வசம் ஏராளமான படங்கள் உள்ளன.

அடுத்தடுத்த ரிலீஸ்
இந்தப் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக காத்திருக்கின்றன. இந்நிலையில் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் டைரி படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டைரி படத்தின் ரிலீஸ்
இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பவித்ரா மாரிமுத்து அருள்நிதிக்கு ஜோடியாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான டீசர்
படத்திற்கு மாயா, கேம் ஓவர் படங்களுக்கு இசையமைத்துள்ள ரான் யோஹன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி மிரட்டலாக அமைந்திருந்தது. ரசிகர்களின் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

களத்தில் சந்திப்போம் படம்
அருள்நிதி நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்திருந்த களத்தில் சந்திப்போம் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கபடி போட்டியையொட்டிய கதைக்களத்தில் படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். படம் காமெடியையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.