Demonte colony 2: மிக்ஜாம் புயல் நிவாரண உதவியாக ரூ.15 லட்சம் வழங்கிய டிமான்ட்டி காலனி 2 டீம்!
சென்னை: நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் டிமான்ட்டி காலனி 2.
இந்தப் படத்தின் டிரெயிலர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிகமான வியூஸ்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிமான்ட்டி காலனி 2 டீம் நிவாரண உதவி வழங்கியுள்ளது.

டிமான்ட்டி காலனி 2 படம்: நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போது துவங்கியுள்ளனர். நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரிலீசுக்கு தயாரான டிமான்ட்டி காலனி 2: இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்தை கனெக்ட் செய்யும் வகையில்தான் தற்போது இரண்டாவது பாகமும் உருவாகியுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ள டிரெயிலரில் காட்சிகள் காணப்படுகின்றன. முதல் பாகத்தில் அருள்நிதிக்கு ஜோடி யாரும் இல்லாத நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
மிரட்டலான இசை: இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை தற்போது இரண்டாவது பாகம் ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். படத்தில் சாம் சிஎஸ் இசை மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் செட் வேலைகள் மற்றும் VFX வேலைகளும் ரசிகர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் படத்தில் ரிபீட்டடாக ஒரே மாதியாக காட்சிகள் இருப்பது டிரெயிலரிலேயே தெரியவந்துள்ளதாகவும் இது எந்த மாதிரியான திரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் என்பது குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.
நிவாரண நிதி வழங்கிய டீம்: இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பிற்கு நிவாரண நிதியாக டிமான்ட்டி காலனி 2 டீம் தற்போது 15 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதி தெரிவித்துள்ளார். டிமான்ட்டி காலனி 2 டீம் சார்பில் தம்பி அருள்நிதி, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து 15 லட்சத்திற்கான காசோலையை தம்மிடம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
உதயநிதி நன்றி: இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து உதயநிதியின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து கமெண்ட் செய்துள்ளார். நேற்றைய தினம் டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில் சில மணிநேரங்களிலேயே இந்த டிரெயிலர் 2 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளதாகவும் ரசிகர்களின் டன் கணக்கான அன்பிற்கு நன்றி எனவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











