Demonte colony 2: அச்சத்தை விதைக்கும் டிமான்ட்டி காலனி 2 பட ட்ரெயிலர்.. ரசிகர்களை கவர்ந்த மேக்கிங்!

சென்னை: அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

Actor Arulnithis Demonte colony 2 movie trailer released

டிமான்ட்டி காலனி படம்: நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முனபு வெளியாகி மாஸ் காட்டியது டிமான்ட்டி காலனி படம். குறைவான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படத்தில் குறைவான கேரக்டர்களை கொண்டு நிறைவான கதைக்களத்தை கொடுத்திருந்தார் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

டிமான்ட்டி காலனி 2 படம்: இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நாயகி என்று யாரும் இல்லாத நிலையில் தற்போது இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ட்ரெயிலர் ரசிகர்களை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. அதிகமான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

முதல் பாகத்தின் தொடர்ச்சி: முந்தைய படத்தின் சில காட்சிகள் இந்தப் படத்தின் ட்ரெயிலரில் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே டிமான்ட்டி காலனி 2 படம் உருவாகியுள்ளதை யூகிக்க முடிகிறது. இந்நிலையில் படத்தில் அருள்நிதியை காப்பாற்றும் முயற்சியில் பிரியா பவானி சங்கர் ஈடுபட்டுள்ளதையும் இந்த ட்ரெயிலர் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது. மேலும் ரசிகர்களை மிரட்டும் அம்சங்கள் இந்தப் படத்திலும் உள்ளதையும் பார்க்க முடிகிறது.

மிரட்டும் சாம் சிஎஸ் இசை: ஆனாலும் பேய் படங்களுக்கேயுரியே ஒரே மாதிரியான காட்சிகளை இந்த ட்ரெயிலரில் பார்க்க முடிகிறது. வழக்கமாக பேடை பார்த்து நடுங்கும் நபர்கள், புத்த பிட்சுகள் என வழக்கமான கேரக்டர்களையே இந்த டிரெயிலரில் பார்க்க முடிகிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக சாம் சிஎஸ் இணைந்துள்ள நிலையில், அவரது இசை, படத்திற்கு மிரட்டலான பின்புலத்தை கொடுத்துள்ளது. படத்தின் செட், VFX ஆகியவை ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரம்மாண்டமான மேக்கிங்: டிமான்ட்டி காலனி படத்தில் குறைவான பட்ஜெட்டில் நிறைவான கதைக்களத்தை கொடுத்திருந்தார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தில் குறைவான இடங்களே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனாலும் தன்னுடைய நிறைவான ஆக்டிங் மூலம் படத்திற்கு அருள்நிதி, ராஜ்திலக் உள்ளிட்டவர்கள் உயிர் கொடுத்திருந்தனர். இந்நிலையில் முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள டிமான்ட்டி காலனி 2 படம் அத்தகைய மிரட்டலை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X