Demonte Colony 2: டிமான்ட்டி காலனி 2 ட்ரெயிலர் அப்டேட்.. மிரள தயாரா மக்களே!

சென்னை: நடிகர் அருள்நிதி -அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

Actor Arulnithis Demonte Colony 2 movie trailer to be release on 16th December

இந்தப் படத்தின் சூப்பர் வரவேற்பை தொடர்ந்து தற்போது டிமான்ட்டி காலனி 2 படம் உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டியது.

டிமான்ட்டி காலனி படம்: நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி படம். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிரட்டியது. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் அமைந்தது. பேயைகூட காமெடியாக்கி படங்கள் வெளியான நிலையில் உண்மையான பேய் அனுபவத்தை இந்தப் படம் கொடுத்தது.

டிமான்ட்டி காலனி 2 படம்: இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முந்தைய பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே, டிமான்ட்டி காலனி 2 படத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். முந்தைய பாகத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

டிமான்ட்டி காலனி 2 பர்ஸ்ட் லுக்: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கல்லறையில் இருந்தபடி அருள்நிதி போஸ் கொடுத்திருந்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் முந்தைய பாகத்தின் சம்பவங்களுடன் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான தயாரிப்பு: முதல் பாகத்தில் திரைக்கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்டமாகவும் பல சர்ப்ரைஸ்களையும் திருப்பங்களையும் இரண்டாவது பாகத்தில் சேர்த்துள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். படத்தல் VFX காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

டிமான்ட்டி காலனி 2 டிரெயிலர்: இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வரும் 16ம் தேதி மாலை வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இருளுக்குள் நுழையும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வித்தியாசமான போஸ்டருன் இந்த அறிவிப்பை அவர் மேற்கொண்டுள்ளார். இதனிடையே இந்த டிரெயிலர் எந்த மாதிரியான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X