விஜய் சேதுபதி அடிவாங்குற வில்லன் இல்ல..ஹீரோக்கே டஃப் தரும் வில்லன்.. அருண் அலெக்ஸாண்டர் !

சென்னை : நடிகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான அருண் அலெக்ஸாண்டர், விஜய் சேதுபதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

Recommended Video

Kavin's Next Bang with Amirtha Ayir | Vijay Sethupathi | Sivakarthikeyan

நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Actor arun alexander shared an interesting of the Vijay sethupathi

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள அருண் அலெக்ஸாண்டர் . சேதுபதியின் கதாபாத்திரம் மாஸ்டர் படத்தில் மற்ற படத்தில் அடிவாங்கும் வில்லன்களை போல இல்லாமல் ஹீரோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அதை நீங்கள் திரையில் காண்பீர்கள் என்று கூறியுள்ளார் .

மேலும் சேதுபதி தற்போது பெரிய நடிகராக மாறிவிட்டார் இருந்தும் அவரது ரசிகர்கள் அவரை ஒரு ஹீரோவாக பார்க்கவில்லை ஒரு நடிகராக தான் பார்கிறார்கள். ஏனெனில் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்கள் திரையில் தங்கள் ஹீரோ அடி வாங்கினால் அலறி விடுவார்கள் அப்படியான விஷயங்கள் ஏதும் விஜய் சேதுபதி படங்களுக்கு இருக்காது என்று அருண் கூறியுள்ளார்.

Actor arun alexander shared an interesting of the Vijay sethupathi

மேலும் கைதி படம் என்னை பெரிய இடத்திற்கு எடுத்து சென்றது அதற்கு லோகேஷ்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் ' லோகேஷ் என்னை எப்போதும் கைவிடமாட்டாப்புள என்றும் கூறியுள்ளார். ஏனெனில் மாநகரம் படத்திற்கு பின் அருண் வாய்ப்புகள் இல்லை என்று வருத்தபட்டதாகவும் அப்போது லோகேஷ் நான் கட்டாயம் ஒரு பத்து படம் பண்ணுவேன் நீங்க ஒரு பத்து படம் நடிப்பீங்க என்று உறுதியளித்து நம்பிக்கை தந்தார் என்று மகிழ்ச்சியாக கூறினார் அருண்

மேலும் மாஸ்டர் படப்பிடிப்பின் போது கைதி படம் பார்த்த விஜய் தன்னை அதிகபடியாக பாராட்டியதாகவும் மேலும் மற்ற பெரிய நடிகர்கள் பாராட்டியதை விட விஜய் பாராட்டியது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்றும் கூறினார்.

Actor arun alexander shared an interesting of the Vijay sethupathi

படத்தில் நிறைய ஆச்சரியங்கள் காத்து கொண்டிருப்பதாக அருண் கூறினார். ஏனெனில் பல விஷயங்கள் இப்படி நாங்கள் கேள்விப்படுகிறோம் என்று ஊடக நண்பர்கள் என்னை சந்திக்கும் போது கேட்கிறார்கள் ஆனால் அது அவர்கள் கேட்கும்போது தான் எனக்கே இப்படி படத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியம் அளிக்கிறது. இதனால் மொத்த படத்தில் பல ஆச்சரியங்களை லோகேஷ் தருவார் என்று அருண் அலெக்ஸாண்டர் உறுதியளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X