விஜய், அஜித் இடம் காலியாகுமா?.. சீனியர் நடிகர் என்ன சொல்லிருக்காரு பாருங்க?

சென்னை: ரஜினி - கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் விஜய் - அஜித் என்ற நிலைதான் நீடித்தது. அவர்களது ரசிகர்களுக்கிடையே ஏகப்பட்ட மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இப்போதும் இரண்டு பேரும் நடித்துவந்தாலும் விஜய் அரசியலிலும், அஜித் கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார்கள். முக்கியமாக ஜன நாயகன் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது.

கோலிவுட்டில் ரஜினியும், கமலும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்களோ அதே அளவுக்குத்தான் விஜய்யும், அஜித்தும் உண்டாக்கினார்கள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் நடிக்க வந்தார்கள். இரண்டு பேருமே திறமையாளர்கள் என்பதால் அவர்களுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைத்தன. அப்படிப்பட்ட நிலைமையில்தான் விஜய் Vs அஜித் என்ற நிலை உருவானது. இதனால் அவர்களது ரசிகர்களிடையே அடிக்கடி மோதல் எழுந்தது உண்டு.

ஒன்றாக நடித்தார்கள்: விஜய்யும், அஜித்தும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்திருந்தார்கள். அடுத்ததாக நேருக்கு நேர் படத்தில் அவர்கள் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து அஜித் விலகிவிட்டார். பின்னர்தான் சூர்யா அந்தப் படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் வந்தார் என்பது அனைவரும் அறிந்தது. பிறகு காலம் செல்ல செல்ல விஜய்யும், அஜித்தும் ஒன்றாக நடிக்கவேமாட்டார்கள் என்ற சூழல் வந்தது. ஏனெனில் இரண்டு பேருக்குமே படத்தின் வியாபாரம் பன்மடங்காக அதிகரித்துவிட்டது.

Actor Arun Paniyn Talks about Vijay And Ajith
Photo Credit:

கவனம் செலுத்தும் நடிகர்கள்: கோலிவுட்டின் சீனியர் ஹீரோக்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்கள் இருவர். விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி களமிறங்குகிறது. அரசியலில் நீங்காத இடத்தையும் அழுத்தமான தடத்தையும் பிடித்துவிட முடிவு எடுத்திருப்பதால் திரைத்துறையிலிருந்து விலகுவதாக விஜய் கூறினார். மேலும் ஜன நாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் தேர்தல் முடிவுகளை பொறுத்தே விஜய்யின் அடுத்தக்கட்ட முடிவு அமையும்.

கார் ரேஸில் அஜித்: விஜய் ஒருபக்கம் இருக்க அஜித்தோ கார் ரேஸ் மீது தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஸ்பெய்ன், துபாய் ஆகிய நாடுகளில் எல்லாம் கார் ரேஸில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். ரேஸ் நடக்கும் சமயங்களில் கண்டிப்பாக படத்தில் நடிக்கமாட்டேன் என்பதுதான் அவரது பாலிசியாக இருக்கிறது. எனவே விஜய்யும், அஜித்தும் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டால் அவர்கள் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்விகள்தன் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.

அருண் பாண்டியன் பேட்டி: இந்நிலையில் பிரபல 90ஸ் நடிகரான அருண் பாண்டியன் விஜய், அஜித் குறித்து செய்தியாளர்கள் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ஆஸ்கர் குழுவில் கமல்ஹாசன் பங்கேற்பது மகிழ்ச்சி. விஜய், அஜித் ஆகிய இரண்டு பேரின் இடங்களும் கோலிவுட்டில் காலியாக இருக்காது" என்றார். முன்னதாக அவர் தனது மகள் கீர்த்தி பாண்டியனை வைத்து அஃகேன்ம் என்ற படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X