மகன் அருண் விஜய்க்காக படம் தயாரிக்கும் நடிகர் விஜயகுமார் - மார்க்கெட்டை பிடிப்பாரா?

சென்னை: நடிகர் அருண் விஜய் தற்போது தன்னுடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பின்பு நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக அவருடைய தந்தை விஜயகுமார் தயாரிக்கும் படத்தில் அறிமுக இயக்குநர் விஜய் குமார் இயக்கப்போகும் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Arun Vijay acts his father’s Vijay Kumars production

பொதுவாக வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் நுழைந்து ஜெயிக்க வேண்டும என்று நினைப்பது புதுமையான விஷயம் கிடையாது. எத்தனையோ வாரிசு நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட சில பேர் ஜெயித்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் போராடிக்கொண்டு தான் உள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசான இளைய திலகம் பிரபுவும் அவருடைய வாரிசான விக்ரம் பிரபுவும் தங்களின் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதற்கு இன்றும் போராடி வருகிறார்கள். பழம்பெரும் நடிகரான முத்துராமனின் வாரிசான நவரைச நாயகன் கார்த்திக்கும், நடிகர் சத்யராஜின் வாரிசான சிபிராஜும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டனர்.

இதில் நடிகர் சத்யராஜ் தன்னுடைய வாரிசான சிபிராஜை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொண்டுவர தானே படத்தை தயாரித்து வெளியிட்டார். இருந்தாலும் சிபிராஜ் இன்னும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடிக்கொண்டுதான் இருக்கிறார். அவ்வளவு ஏன், இளையதளபதி விஜய் கூட தன்னுடைய தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியால் தான் தமிழ் திரையுலகில் நுழைய முடிந்தது.

இப்படி பல நடிகர்களின் வாரிசுகள் முன்னுக்கு வந்திருந்தாலும் கூட, இன்னும் சில பேர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவர்களால் தமிழ் திரையுலகில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லையே என்ற பேச்சும், ஆதங்கமும் தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் வாரிசான அருண் விஜயும் தமிழ் திரையுலகில் தன்னை தக்கவைக்க தொடர்ந்து போராடி வருகிறார். நடிகர் அருண் விஜய் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு பன்முகத் திறமையுள்ளவரும் கூட. இவருக்கு நன்கு நடனமாடவும் தெரியும்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் 1995ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இருந்தாலும் அடுத்ததாக வெளி வந்த பிரியம் படத்தின் மூலம் தான் அதிகம் பேசப்பட்டார்.

இருந்தாலும் சேரனின் இயக்கத்தில் ராஜ்கிரன் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான பாண்டவர் பூமி படம் தான் இவரை ஒரு நல்ல நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்தது. ஆனாலும் கூட அருண் விஜய் தமிழ் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இன்னமும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

என்னை அறிந்தால் படத்திற்கு பின்பு அவர் நடிப்பில் வெளியான படங்களும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு அருண் விஜய் தற்போது மாபியா மற்றும் பாக்சர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அருண் விஜய் தற்போது தன்னுடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

வாரிசு நடிகர்களை மக்கள் ஏற்றுகொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களைப் பொறுத்தே அமையும். அதையும் தாண்டி வாரிசு நடிகர்களுக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் அருண் விஜய் அதிர்ஷ்டகாரர் தான். அவரை தூக்கிவிட அவருடைய தந்தை பக்கத்துணையாகவும் பக்கபலமாகவும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X