For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹரிதாஸ் இயக்குநரோடு இணையும் அருண் விஜய் - புதிய பாணியில் உருவாகும் த்ரில்லர் படம்

|
அடுத்த படத்துக்காக ஹிந்தி கத்துக்கிட்டிருக்கேன் I Saaho Press Meet | Arun Vijay

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் அவரது குற்றம் 23 போலீஸ் கதாப்பாத்திரத்தில் இருந்து வேறுபட்ட பாத்திரம். இரண்டு கதைகளின் களங்களும் முற்றிலும் வேறானது. அவரது பாத்திரம் மிகவும் புத்திக்கூர்மை வாய்ந்த, வலுவான ஒரு பாத்திரமாக இருக்கும். அத்துடன் மிகவும் உணரச்சி மிக்கதாகவும் இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

ஹரிதாஸ் திரைப்படம் மூலம் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இயக்குநர் GNR குமரவேலன். தனது திறமையை வெளிக்கொணரும் அடுத்த படைப்பில், தமிழ் சினிமாவின் வெற்றி நாயகரான அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார்.

Actor Arun Vijay Acts in a different story in Tamil Cinema

அருண் விஜய் இப்படத்தில் தன் வெற்றியின் உற்சாக அடையாளமான குற்றம் 23 படத்தின் காக்கி உடையை மீண்டும் இப்படத்தில் அணிய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சிறிய அளவிலான பூஜையுடன் துவங்கியது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இயக்குநர் நரேன் மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

படம் பற்றி இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது, இப்படம் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் புதிதாக இருக்கும். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்றார்.

இப்படத்தில் அருண் விஜய் இணைந்தது பற்றி கூறும்பொழுது, சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒருவர், அவர் ஏன் இப்படத்தில் இருக்கக் கூடாது என நினைத்தேன். மேலும் அவர் ஏற்கனவே குற்றம் 23 படத்தில் காக்கி சட்டையில் தன்னை கச்சிதமாக பொருத்தி நிரூபித்தவர்.

ஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்

இப்படம் அவரது குற்றம் 23 போலீஸ் கதாப்பாத்திரத்தில் இருந்து வேறுபட்ட பாத்திரம். இரண்டு கதைகளின் களங்களும் முற்றிலும் வேறானது. அவரது பாத்திரம் மிகவும் புத்திக்கூர்மை வாய்ந்த, வலுவான ஒரு பாத்திரமாக இருக்கும். அத்துடன் மிகவும் உணரச்சி மிக்கதாகவும் இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக்கதையை முழுதாக முடித்த போதே அருண் விஜய் மனதில் வந்துவிட்டார். ரசிகர்கள் படத்தினைப்பார்க்கும் போது அவர் இப்பாத்திரத்திற்கு ஏற்றவர் என்பதை நிச்சயம் உணர்வார்கள் என்று குறிப்பிட்டார்.

இப்படத்தில் நடிக்க மேலும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் (Movie Slides Pvt Ltd) தயாரிக்கிறார்கள். நடப்பு செப்டம்பர் மாத மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

Actor Arun Vijay Acts in a different story in Tamil Cinema

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தடம் படத்தில் அருண் விஜய்யுடன் பணிபுரிந்த கோபி ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைக்கிறார்.

சாஹோ படத்தின் மூலம் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ள அருண் விஜய் தனது அடுத்த படமான மாஃபியா படத்தை முடித்துவிட்டார். மேலும் அவர் நடிப்பில் அக்னி சிறகுகள், பாக்ஸர் படங்கள் விரைவில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The new movie starring actor Arun Vijay is a different character from his Kutram 23 Film. The domains of both stories are completely different. His character will be a very intelligent, strong character. The character is also very sensitive.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more