இருண்டகாலத்தை எதிர்கொண்டுள்ளது உலகம்.. தடுப்பூசி போட்ட கையோடு சூப்பர் மெசேஜ் சொன்ன அருண் விஜய்!
சென்னை: நடிகர் அருண் விஜய் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சத்தை தொட்டு வருகிறது.
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் நிரம்பி வழிகின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள்
இறந்தவர்களின் உடலை எரிக்கக்கூட இடமில்லாமல் மக்கள் திணறி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பிரபலங்கள் விழிப்புணர்வு
அதேநேரத்தில் தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதுள்ள அச்சத்தை போக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பொது மக்களுக்கு வேண்டுகோள்
அந்த வகையில் நடிகர் அருண் விஜய் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள அருண் விஜய் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவையும் ஷேஙர் செய்துள்ளார்.
Recommended Video

இருண்ட காலம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, தடுப்பூசி போட்டாயிற்று.. இந்த இருண்ட காலங்களை உலகம் எதிர்கொண்டுள்ள நிலையில், புத்திசாலித்தனமாக செயல்படுவது நம் சமூகப் பொறுப்பு. தயவுசெய்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், தடுப்பூசி போட்டு பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

லைலா தடுப்பூசி
இதேபோல் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை லைலாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தான் தடுப்பூசி போட்ட போட்டோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள லைலா, அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்காத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











