ப்பா… என்ன ஸ்மார்ட்டா இருக்காரு… இணையத்தில் வைரலாகும் அருண்விஜய்யின் சிறுவயது போட்டோ !

சென்னை : நடிகர் அருண்விஜயின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரின் லைக்குகளை குவித்து வருகிறது.

Recommended Video

Wife அ விட்டுக்கொடுக்க முடியாது but இவங்க தான் எல்லாம் | Arun Vijay speech | Filmibeat Tamil

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார் அருண் விஜய்.

இவர் தமிழ் மட்மின்றி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.

அறிமுகம்

அறிமுகம்

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறைமாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அருண்விஜய். ஆனால் இந்தபடம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையாமல் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இவர் பிரியம், கங்கா கௌரி, காத்திருந்த காதல், துள்ளித்திரிந்த காலம் என பல படங்களில் நடித்தார். இந்த படங்களுக்கும் தோல்வியைச் சந்தித்தன.

விஜய் அட்வைஸ்

விஜய் அட்வைஸ்

தொடர் தோல்விகளால் துவண்டு போன நடிகர் அருண் விஜய், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாரம். அதன் பிறகு விஜய் கொடுத்த அட்வைஸால் மீண்டும் சினிமா பக்கம் திரும்பி உள்ளார் அருண்விஜய்.

வில்லனாக விக்டர்

வில்லனாக விக்டர்

கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் வில்லன் விக்டர் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்து இவரை அடுத்து நிலைக்கு கொண்டு சென்றது.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

இதையடுத்து இவர் நடித்த குற்றம்23, செக்கசிவந்த வானம், தடம், மாஃபியா ஆகியபடங்கள் ஹிட்டடித்து இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. தற்போது இவர், பார்டர், சினம், அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

என்ன ஸ்மார்ட்

என்ன ஸ்மார்ட்

இந்நிலையில்,அருண்விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்பா... என்ன ஸ்மார்ட் என்று அவரை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் பலரது லைக்குகளை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X