Actor Arun Vijay: விடாமுயற்சி சான்ஸ் இதனாலத்தான் கிடைக்கலை.. அருண் விஜய் பதில்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்கள் இடைவெளி விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தின் சூட்டிங்கில் அஜித், திரிஷா மற்றும் அர்ஜூன் ஆகியோர் பங்கேற்கவள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்ப சூட்டிங்கையும் நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதத்திலேயே இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சூட்டிங் துவங்கியது.
மகிழ் திருமேனி முன்னதாக இயக்கியுள்ள தடம் படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். இந்தப்படம் அருண் விஜய் கேரியரில் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் மிஷன் படம் வரும் 12ம் தேதி பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை அருண் விஜய் கொடுத்து வருகிறார். இந்த பேட்டிகளின்போது விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி குறித்தும் அவர் பேசியுள்ளார். மகிழ் திருமேனியின் திறமை குறித்து தான் அதிகமாகவே தெரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அஜித்துடன் அருண் விஜய் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார். இந்தப் படம் இவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. மேலும் அதிகமான பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஏஎல் விஜய் இயக்கத்தில் மிஷன் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் தற்போது அருண் விஜய் ஈடுபட்டுள்ளார்.
அருண் விஜய் -மகிழ் திருமேனி கூட்டணி: முன்னதாக அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இதேபோல மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையற தாக்க, தடம் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களையும் கொடுத்திருந்தார். இந்த இரு படங்களுமே அருண் விஜய் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த படங்கள். இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிக்க மகிழ் திருமேனி தன்னை கூப்பிடவில்லை என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். தான் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்ததால்தான் விடாமுயற்சி படத்தில் நடிக்க தன்னை மகிழ் திருமேனி அழைக்கவில்லை என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
வணங்கான் படத்தில் அருண் விஜய்: பாலாவின் படங்களில் நடிக்கும் நடிகர்கள், மற்ற படங்களில் கமிட்டாகக்கூடாது என்பதை அவர் மிகவும் கடுமையாக பின்பற்றி வருகிறார். இந்நிலையில் வணங்கான் படத்தில் நடித்து வந்ததால்தான் விடாமுயற்சி படத்தில் அருண் விஜய் நடிக்கவில்லை என்று அருண் விஜய் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் விடாமுயற்சி படம் மகிழ் திருமேனிக்கு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த படமாக அமையும் என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். மகிழ் திருமேனி எப்போதுமே தன்மீது தனிப்பட்ட அக்கறையுடன் இருப்பார் என்பதையும் அருண் விஜய் சுட்டிக் காட்டினார்.
மகிழ் திருமேனிக்கு பாராட்டு: ஒரு ஹீரோவை மகிழ் திருமேனிக்கு பிடித்துவிட்டால் அவரை திரையில் மிகவும் சிறப்பாக காட்ட முற்படுவார் என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். தற்போது அவர் அஜித்துடன் இணைந்துள்ளது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மகிழ் திருமேனி டச்சில் அஜித்தின் மாஸ் பிரசன்ஸ் சிறப்பாக அமையும் என்றும் அருண் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்கிரிப்டிற்காக வேலை செய்யும்போது தன்னுடைய மொபைலை கூட மகிழ் திருமேனி ஆஃப் செய்து விடுவார் என்றும் அவர் சூட்டிங் வரும்போதுதான் தான் பேசுவேன் என்றும் அருண் விஜய் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











