ஸ்டார்ட்.. ஆக்ஷன்.. ரோலிங்.. மச்சானுடன் இணைந்த அருண் விஜய்.. பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

சென்னை: அருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஹரி, நடிகரும் தனது மைத்துனருமான அருண் விஜயை இயக்கவுள்ளார். இருவரும் முதல் முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இந்தப் படம் அருண் விஜய்க்கு 33வது படம். இதுதொடர்பான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

ட்ரம் ஸ்டிக் புரடெக்ஷன்

ட்ரம் ஸ்டிக் புரடெக்ஷன்

இந்நிலையில் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இஃக்லூ படங்களை தயாரித்த ட்ரம் ஸ்டிக் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரியா பவானிசங்கர்

பிரியா பவானிசங்கர்

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா, ஜெயபாலன், ராஜேஷ், ராமச்சந்திர ராஜூ, யோகி பாபு புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதில் பிரியா பவானிசங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

விஜயக்குமார் இருக்கிறாரா?

விஜயக்குமார் இருக்கிறாரா?

ஏற்கனவே இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஹரியின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகரும் தனது மாமனாருமான விஜயக்குமார் இந்தப் படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

இந்தப் படம் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சேவல் படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஹரியுடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ஆகஸ்ட்டில் ரிலீஸ்

இப்படம் அருண் விஜய் நடித்த படங்களை காட்டிலும் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படம் என்றும் கூறப்படுகிறது. இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X