வாரிசு என்பதால் திறமையாளர்களை புறக்கணிக்க முடியாது..அதிதிக்கு ஆதரவாக பேசிய அருண் விஜய்!
சென்னை : இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கருக்கு ஆதரவாக நடிகர் அருண் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் அறிவழகன் அருண் விஜய் கூட்டணி என்றாலே பக்காவான க்ரைம் த்ரில்லருக்கு பஞ்சமே இருக்காது. இந்த கூட்டணி ஏற்கெனவே குற்றம் 23, பார்டர் படங்களுக்காக இணைந்து வெற்றியை ருசித்துள்ளனர்.
இக்கூட்டணி, தற்போது, சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் தொடரில் கைகோர்த்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் திருட்டு விசிடி காலம் தொடங்கி, இன்றைய டொரன்ட், டார்க் வெப் வரை திரைப்படங்களைத் திருட்டு வீடியோவாக வெளியிட்டு வருமானம் பார்க்கும் கும்பலை, திரையுலகம் உட்பட எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. 8 எபிசோடுங்கள் கொண்ட இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக நகர்கிறது.

அருண் விஜய் பேட்டி
அருண் விஜய், மன அழுத்தத்துடன் வாழும் அதிரடி என்கவுன்டர் அதிகாரியாக ஆக்ஷனில் மிரட்டி உள்ளார். வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அருண்விஜய், இந்த படத்தில் தனது கேரக்டர் குறித்தும், நடித்த அனுபவம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

உண்மைக்கதை
ஒரு திரைப்படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை, பெரும் முதலீடு செய்து, நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர்,இசையமைப்பாளர் என அனைவரின் கூட்டுமுயற்சியால் உருவாகிறது. அப்படி கஷ்டப்பட்டு எடுக்கும் திரைப்படங்களை உடனுக்குடன் திருட்டுத் தனமாகவெளியிட்டு, நஷ்டத்தை ஏற்படுத்துபவர்களை தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் தோலுரித்து காட்டுகிறது.

அதிதிக்கு ஆதரவு
மேலும், சினிமாவில் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்விஜய், வாரிசு நடிகர்கள் என்பதற்காக ரசிகர்கள் படம் பார்க்க வரமாட்டார்கள். திறமை வேண்டும். மேலும் வாரிசு ஆக இருப்பதால் அவர்களின் தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் உள்ளது. அதே போல, வாரிசு என்பதால் திறமையாளர்களை புறக்கணிக்க முடியாது அதிதிக்குள் பல்வேறு திறமைகள் உள்ளது என அருண்விஜய் அதிதிக்கு ஆதரவாக பேசினார்.


Click it and Unblock the Notifications











