ஏன் இப்படி? வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ!

By

சென்னை: படப்பிடிப்பு இல்லாததால் நடிகர் அருண் விஜய், வீட்டுக்குள்ளேயே வெறித்தனமாக பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Celebrities Self Quarantine | Bharath | Yash | Arun Vijay

நடிகர் அருண் விஜய், இப்போது ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

அடுத்து அறிவழகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வந்தது.

அக்னிச்சிறகுகள்

கொரோனா காரணமாக படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொண்டு படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்து மூடர்கூடம் நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறார் அருண் விஜய். இதன் ஷூட்டிங் ரஷ்யா உட்பட வெளிநாடுகளில் நடந்துள்ளது. அடுத்து விவேக் இயக்கும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மூன்று விதமான ஷேட் உள்ள கேரக்டரில் நடிக்கிறார்.

தேவர்மகன் போல

தேவர்மகன் போல

'கிராமத்து கதைகளிலும் நடிக்கும் ஆசை இருக்கிறது. தேவர் மகன் போல ஒரு கிராமத்து கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்' என்று சமீபத்தில் கூறியிருந்தார், அருண் விஜய். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி இதை அறிவித்தார்.

வீடியோ

வீடியோ

இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட படங்களின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யும் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பார்க்கர் ஸ்டன்ட்

பார்க்கர் ஸ்டன்ட்

அதில், தனது வீட்டு மொட்டை மாடியில் ஸ்டன்ட் பயிற்சி செய்து வருகிறார். அதன் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். "நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டன்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே ஏதாவது உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருங்கள். தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்லவேண்டாம்' என்று கூறியுள்ளார் அருண் விஜய். இது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X